Thursday, January 19, 2017

மருந்து அரசியல்

                      காளைகளுக்காக காளையர்கள் போராடுகின்றனர். மகிழ்ச்சி தரும் நிகழ்வு. நாட்டு மாட்டு பால் உடலுக்கு நல்லது என்பது வெளியில் தெரிந்த உடன்  அனைவருக்கும் போராட்ட குணம் மேலிடுகிறது. மாட்டுப்பாலுக்கே இவளவு கொந்தளிக்கிறோமே இன்னும் நிறைய இருக்கிறது மருந்தரசியல். தெரிந்து கொள்வோம்.

                வெள்ளையர்கள் காலத்திலயே நமது பாரம்பரிய மருத்துவத்தை அழிக்க திட்டங்கள் தீட்டப்பட்டது. ஆங்கில மருத்துவமே சிறந்தது என நம்ப வெய்க்கப்பட்டு அது வளர்ந்தது. ஒரு மருந்து தயாரானால் அதற்க்கு அந்நிய நிறுவனங்களுக்கு பணம் போய் சேரும். பேட்டன் ரைட்ஸ் எனப்படும் காப்புரிமைக்காக. ஆனால் அவர்களுக்கு அந்த வருமானம் போதுமானதாக இல்லை. இன்னும் வேண்டும். நமது வாழ்க்கை முறை அழித்தொழிக்கப்பட்டால் அவர்களுக்கு இன்னும் லாபம். இயற்கை வேளாண்மை ஒழித்தார்கள். டிராக்டர்கள் கொடுக்கப்பட்டு நாட்டு மாடுகள் வாங்கிக்கொள்ளப்பட்டன. விவசாயிடம் உரமும், பூச்சிக்கொல்லியும் உயர்ந்ததென கூறி விற்கப்பட்டது. இயற்கை விவசாயத்தில் அது தேவை இல்லை. செயற்கை விவசாயத்தால் ஏற்பட்ட உடல் பாதிப்புகளுக்கு மருந்து விற்கப்பட்டது. இன்று நேரடி அந்நிய முதலீட்டில் மருந்து விற்கும் அந்நிய கார்பரேட்டுகள் கொடி கட்டி பறக்கின்றன. நம் நாட்டில் பாரம்பரிய மருத்துவத்தை மட்டுப்படுத்த அரசே துணை நிற்பதால், அவை மீண்டெழ முடியாமல் அழிகின்றன. நமது விதை மறந்து அவர்கள் கொடுத்த விதைகளால் விளைந்தவை வியாதிகள் பரப்பவே பயன்பட்டன. இன்று பிடி கத்திரிக்காய் பூசணி அளவும், கைதடி போல நீண்டும் வித விதமாக வளர்கிறது. இது மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒன்று நம் நாட்டில் தாராளமாக அனுமதிக்கப்பட்ட ஒன்று. மரபணு மாற்றப்பட்ட கொத்தமல்லியில் வாசமும் மருத்துவ குணமும் இல்லை. செத்த கொத்தமல்லியாக அது கருதப்படுகிறது. இவையெல்லாம் வியாதிகளை பரப்பி நம்மிடம் மருந்து விற்க.

 கணினியில் ஒருவன் virusகு program எழுதினால் அதை தடுக்கும் anti-virus கும் அவனே program எழுதுவான். பின் வைரசை கணினியில் செலுத்தி கெடுத்து, பின்னர் anti-virus செயலிகளை விற்கும் நிறுவனங்களுக்கு தான் அதற்குரிய program எழுதியதாக அதை பேரம் பேசி விற்பான். இது தான் கார்பரேட் வியாபாரம் 

ஆப்பிரிக்காவில் மாட்டும் ஏன் அனைத்து வியாதிகளும் தொடங்குகின்றன என்று யாராவது கேள்வி எழுப்பியது உண்டா. எய்ட்ஸ், எபோலோ என்று எது எடுத்தாலும் அங்கேயே தொடங்குகிறது. காரணம் என்ன தெரியுமா? இந்த வைரசுகள் மேற்கூறிய கணினி வைரசுகள் போல் உருவாக்கப்பட்டு செலுத்தப்பட்டு இருக்கலாம்னு ஒரு சந்தேகம் எழுகிறது. கண்டுபிடிக்கப்பட்ட வைரசுகளுக்கு இவர்கள் கட்டுப்படுத்த மட்டுமே மருந்து தருவார்கள். வியாதி நீங்க அல்ல. இதுவே மருத்துவ அரசியல்.

உதாரணமாக நம் கணையம் கெட நாம் உண்ணும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களும் ஜெர்சி பாலும் காரணம் என்பது திண்ணம். கார்பரேட்டுகள் கொண்டு வந்த இவை அனைத்தும் கணையதை பதம் பார்த்தன. அவை செயல்பாடுகளை நிறுத்தினால் இன்சுலின் சுரக்காமல் ரத்தத்தில் சக்கரையின் அளவு அதிகரிக்கும். இவர்கள் கணியத்தை சரிசெய்ய மருந்து கண்டு பிடித்தால் மருந்து தொடர்ந்து விற்காதென்பதால் இன்சுலினை உருவாக்கி அதை விற்றனர். அதை உட்கொண்டால் கணையம் மீண்டும் செயல்படுவது கடினம். உதாரணத்துக்கு கோமாவில் இருப்பவர்களின் கை கால்களை மடக்கி நீட்டும் பயிற்சிகள் கொடுக்கப்படும் தினசரி. ஏனெனில் என்றாவது ஒருநாள் அவர் எழுந்தால் அவை செயல்பட வேண்டுமென்கிற நோக்கம் தான். ஆனால் கணையம் எதிர்காலத்தில் செயல்படவே கூடாதென்ற வியாபார நோக்கம் இந்த இன்சுலின் மருந்துகள் விற்பதில் தெரிகிறது. இதை விற்பதும் கார்பரேட்டுகலே. இது போல தான் ரத்த அழுத்தமும். நூறு சதவீத அந்நிய நேரடி முதலீடு என்பது முழுக்க முழுக்க அந்த தொழிலையே தாரை வார்க்கும் செயல். 


இங்கிலாந்தில் ஒரு மருத்துவரை சந்திக்க நேரம் கேட்ட்கப்படும், அது கொடுக்கப்படும் முன் அவர்களின் சிறு சிறு வியாதிகளே குணமாகிவிடும். அந்த அளவு மருத்துவர்கள் மருந்துகளை முடிந்தவரை பரிந்துரைக்கவே மாட்டார்கள். அதாவது தானே சரி ஆகிவிடும் ஓய்வெடுங்கள் என்பார்கள். பாரசிட்டமால் டேப்லெட்டுகள் கூட காய்ச்சல் வந்த முதல் நாளே எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படாது. இங்கே நிலைமை தலைகீழ். ஒரு தலைவலி என்று மருத்துவரை அணிகினால் கூட அதிக மருந்துகளை கொடுக்கின்றனர். நாம் இந்த மருந்தரசியலில் இருந்து மீண்டு ஏல வேண்டும். நமது அடுத்த தலைமுறைகளை நோயின்றி காக்க மெய்யியல் எனும்(10000 வருடங்களுக்கு முன்) ஓகம் எனும்(5000 வருடங்களுக்கு முன்) யோகம் எனும்(1500 வருடங்களுக்கு முன்) கலையை பயிற்றுவிக்க வேண்டும். பாரம்பரிய சித்த மருத்துவ முறைகளை மீட்டுருவாக்கம் செய்தல் வேண்டும். ஒருவன் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டுமெனில் அதற்கும் தீர்வு ஓகத்தில் இன்றளவும் உண்டு. மூச்சு பயிற்சி.  இந்த மூன்றும் இணைந்து இந்த மருந்தரசியலை விரட்ட துணை நிற்கும். வாழ்க தமிழ்