Friday, January 31, 2014

வாழை இலை

வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது !!

இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம்.

அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்…

முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும்.

அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.

இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.

காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான்.

ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.

இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.

நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம்.

ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன.

வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலையின் பயன்பாட்டை அறிந்து கொள்ளுங்கள்.

முத்திரை..!



முயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்....

1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.

2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.

3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.

5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.

6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.

7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.

.9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.

10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.

11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம்.

இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.

Wednesday, January 29, 2014

அநியாயம்

உலகிற்கே மருத்துவம் சொல்லிகொடுத்த எங்கள் சித்தர்களின் கால்களிள் சமர்பிக்கிறேன்... தமிழகத்திற்கு தொடர்ந்து பங்கம் விளைவிக்கும் மலையாளிகளின் துரோகத்தை என் தமிழ் உறவுகள் உணரவேண்டும் என்ற காரணத்திற்காக (சமந்தம் இல்ல பதிவு ) இங்கே இந்த கட்டுரையை பதிகிறேன்.....

தமிழகத்தின் எதிர்காலத்தை நசுக்கும் இஸ்ரோ மலையாள விஞ்ஞானிகள்!....

இந்தியாவின் எந்த மாநிலத்தையும் விட்டுக்கொடுக்காத மத்திய அரசும் மலையாளிகளும் தமிழகத்தை மட்டும் தொடர்ந்து நசுக்கிவருகின்றனர். இதற்கு சான்றகதான் இஸ்ரோ விஞ்ஞானிகள் தமிழகத்தில் இஸ்ரோ சார்ந்த வளர்ச்சியில் முட்டுகட்டையாக இருந்துவருகின்றனர். காய்கறி, பால், பழம், தானியம், பஞ்சம் பிழைப்பதற்கு, சினிமாவில் கூத்தடிப்பதற்கு என தேவைப்பட்ட தமிழகம், இஸ்ரோ சார்ந்த தொழில்களில் வேண்டாத தமிழகம்மாக மலையாளிகள் பார்கின்றனர்.

அப்படி என்ன? மலையாளிகள் செய்துவிட்டனர் என்று கேட்டல் இன்று காலை வெளிவந்த தமிழ் செய்தித்தாள் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஆம், தமிழகத்தில் மகேந்திரகிரி உட்பட 16 இடங்களில் சுமார் 6500 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமாக ஆசியாவிலே மிக பெரிய விண்வெளி ஆராய்ச்சி தளமாக விளங்கிவரும் மகேந்திரகிரியில்தான் இஸ்ரோவிற்கு தேவைப்படும் "வலியமலா" திரவ இயக்க திட்ட மையங்களாக அமைந்துள்ளன. இந்த இடத்தில் ராகேட் இஞ்சின் அமைதல், சோதனை ஓட்டம் உட்பட 70% சதவீத பணிகள் மகேந்திரகிரியில் நடக்கிறது இருந்தும் இதேபோல் மற்ற மாநிலங்களின் உள்ள வலிமலா இயக்க திட்ட மையங்கள் தன்னச்சியோடு செயல்படும்பொது தமிழகத்தில் உள்ள வலிமலா இயக்க திட்டம் கேரளாவில் உள்ள மையத்தோட கிளையாக தொடர்ந்து செயல்படுகிறது. 6500 ஏக்கர் கொடுத்த தமிழகத்திற்கு ஒரு பியுனைகூட தேர்வு செய்ய தகுதியில்லை.

இந்தியாவில் உள்ள மற்ற மையங்களை காட்டிலும் அதிக பணிகள் நடக்கும் தமிழகத்தின் மகேந்திரகிரி மட்டும் தன்னாட்சி அதிகரமில்லாமல் ஒரு தமிழர்கள் கூட பணியில் அமர்தமுடியாத நிலைப்பாடு உள்ளது. காரணம், மலையாளிகள் மட்டும் பயன்பெறவேண்டும் என்ற இனவெறிதான் மூலகாரணம். தமிழகத்தின் நான்கு மாவட்டங்களின் பரபளவில் உள்ள ஒரு மாநிலத்தின் மைந்தர்கள்தான் இஸ்ரோவில் விஞ்ஞானிகளாக வரவேண்டும், எங்கே? தமிழகத்திற்கு தன்னாட்சி அந்தஸ்து கொடுத்தால் அதிகளவு தமிழர்களின் ஆதிக்கம் இஸ்ரோவில் வந்துவிடுமோ என்ற இஸ்ரோ தலைவர் ராதா கிர்ஷ்ணன் மற்றும் மத்திய அமைச்சர் நாராயணசாமியும் சேர்ந்து செய்யும் சதி என்பது அப்பட்டமாக தெரிகிறது.

மேற்கண்ட செய்தியை தனக்கு சாதகமா பயன்படுத்தும் கட்சி நிச்சயம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடத்தில் வரும் என்பதில் சந்தேகமில்லை. நடிப்பதற்கு கொலிவூட் வேண்டும், படிப்தற்கு ஐ.ஐ.டி வேண்டும், தின்பதற்கு ஒட்டன் சத்திரம் காய்கறிகள் வேண்டும். ஆனால், தமிழகத்தில்லிருந்து ஒரு இளம் விஞ்ஞானிகள் கூட இஸ்ரோவிற்கு வரகூடாது என்பது மலையாள வெறியர்களின் எண்ணம்... இறுதியாக ஒன்றைமட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறோம் தமிழகம் கொதித்தால் கடவுள் பிறந்த மண் சோத்துக்கு பிச்சை எடுக்கும் மண்ணாகமாறிவிடும். ஒட்டன் சத்திரத்தில் உள்ள அத்தனை காய்கறிகளையும் குவிண்டால் குவிண்டலாக ஏற்றுமதி செய்துவிட்டால் சோத்துக்கு லாற்றிதான் அடிக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை....

வாசகர்களே மன்னிக்கவும் நீண்ட நாட்களுக்கு பின் உணர்ச்சி வசப்பட்டு எழுதும் இரண்டாவது கட்டுரை...

மகிழம்பாடி வசந்தபாலா .....

Wednesday, January 22, 2014

நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு


நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் அதிகம் ஷேர் செய்யுங்கள்...! ஒரு நடிகையின் போட்டோ வை ஷேர் செய்யறோம் . உங்கள் ஷேர் ஒரு உயிரை கூட காப்பாற்றலாம் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு" ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...! இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு. யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது? அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. 'இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா. ஆய்வு சொல்லும் முடிவுகள்: சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை. அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன. நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்டசோடியம் அளவாகும். ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது. கொழுப்பும் மிகுதி. ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும்குழந்தைகள் ஆளாக நேரிடும். ப்ரீத்தி ஷா சொல்கிறார் . ''ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம். ஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது. ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள்இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன. பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல. நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது'' என்றார் அக்கறையுடன். உண்மைதான். இந்த காலகட்டத்தில் எந்த விஷயத்தையுமே விழிப்பு உணர்வுடன்தான் அணுக வேண்டும்! தகவல் :- Suresh babu super photos & Mukkiya Seithigal.com

Saturday, January 18, 2014

இங்கிலிபீஸ் பீட்டர் மாமா க்களுக்கு

தமிழ், கடல்கடந்தும் வாழும் என்ற நம்பிக்கையூட்டும் செய்தி
ஒன்று

“ரஷியநாடு தமிழைக் கொண்டாடுகிறது’.

அந்நிய மண்ணில் அன்னைத் தமிழுக்கு கிடைத்த‍ மிகப்பெரிய கௌரவம்!

“தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ பாராட்டுவது நாமாக த்தான் இருப்போம். நம் மொழி யை நாம் பேசவே பாராட்டுகி றோம். அந்தளவு போய்விட்ட து நம் மொழி. ஆனால், தமிழு க்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கொண் டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய் மொழியான ரஷிய மொழியிலும், இரண்டா வதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்பு மொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதி யிருக்கிறார்கள்.

தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்க ளால் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர் கள் கூறும் காரணம், தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக இருக்கி றது.

“உலகில் 6 மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்க ம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சம்ஸ்கிருதம். இந்த 6 மொழிகளில் நான்கு மொழிகள் இன்று வழக்கில் இல்லை. இலக் கிய, வரலாற்று செழுமையான மொழி, எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக தமிழ்மொழி தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே “கிரெம்ளின் மாளிகை‘ எனத் தமிழில் எழுதினோம்” என்று கூறுகிறார்கள்.
மேலும், அங்கே வைக்கப்பட்டுள்ள அரிய நூல்களு ள் நமது திருக்குறளும் ஒன்று.

வெளிநாட்டில் உள்ளவர்களுக்குக்கூட நம் தமிழின் பெருமை தெரிந்துள்ளது. ஆனால், நாமோ தமிழைக் காப்பாற்ற கருத்தரங்கு நடத்திக் கொண்டிருக்கிறோ ம்’ .தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் பேசத் தயங்கும் தமிழர்கள் இனியாவது தமிழ் மொழியின் அருமை பெருமையை உணர் ந்தால் சரி!

இந்த செய்தியை உங்களது அனைத்து ” இங்கிலிபீஸ் பீட்டர் ” மாமா க்களுக்கு பகிரவும்

Monday, January 13, 2014

அம்மா

மகன் வேலைக்கு சென்றதும்
தந்தை ஓய்வு பெறுவார்... ஆனால்
தாய்க்கு என்றும் ஓய்வு இல்லை.
கணவனுக்காக உழைப்பாள்... மகனுக்காக
உழைப்பாள்... பேரன், பெயர்த்திக்காக
உழைப்பாள்... அவளின் இறுதி மூச்சு இருக்கும்
வரை அனைவருக்காகவும் உழைத்துக்கொண்டே
இருப்பாள்...! "அம்மா."

Sunday, January 12, 2014

சமஸ்கிருதம் வடமொழி அல்ல

சம(ஸ்)கிருதம்! சம=சமன்=equal / கிருதம்=மொழி=language தமிழுக்குச் சமாந்தரமாக ஒலியலைச் சக்திகளை எழுப்பும் மொழியாக சித்தர்களால் உருவாக்கப்பட்ட மொழியே சம(ஸ்)கிருதம். தமிழே காலத்தால் மூத்த ஞானமொழி ஹிந்தி, உருது போன்ற மொழிகளை வடமொழி எனலாம். சம(ஸ்)கிருதம் வடமொழி அல்ல. அது தமிழ்ச்சித்தர்கள் மொழி. தமிழும் சம(ஸ்)கிருதமும் சித்தர்களின் மொழிகளே. சம=சமமாக, கிருதம்=மொழி. தமிழுக்குச் சமமாக ஞானிகளால் ஒலியலைச் சக்திகளை எழுப்பும் மொழியாக உருவாக்கப்பட்ட மொழிதான் சம(ஸ்)கிருதம். தமிழே ஆதிமொழி. தமிழே சித்தர்களின் உயர் ஞானமொழி. இலக்கண அடிப்படையில் ஹிந்தி, உருது போன்ற மொழிகளைவிட தமிழுக்கும் சம(ஸ்)கிருதத்திற்குமே நிறையப் பொதுப்பண்புகள் உண்டு. ஹிந்தி, உருது போன்ற மொழிகள் சம(ஸ்)கிருத சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன தவிர இலக்கண அடிப்படையில் பொதுப்பண்புகள் தமிழை விடக் குறைவே. சம(ஸ்)கிருதம் நம் தமிழ்ச்சித்தர்கள் உருவாக்கிய மொழியே. தமிழும் சம(ஸ்)கிருதமும் சித்தர்கள் மொழியே. ஆதலால்தான் எம் முன்னோர் சம(ஸ்)கிருதத்தை கோவில் வழிபாட்டு மொழியாக ஏற்றுக்கொண்டனர். நம் பெயர்களில் சம(ஸ்)கிருதம் யாரும் திணித்ததால் வரவில்லை. சித்தர் மொழிகளை நம்மொழியாக ஏற்றுக்கொண்டதனால் வந்தது. ஹிந்தி, உருது போன்ற மொழிகளை வடமொழி எனலாம். சம(ஸ்)கிருதம் வடமொழி அல்ல. அது தமிழ்ச்சித்தர்கள் மொழி. நிறையப்பேர் இந்தி, உருது போன்ற வடமொழிகள் சம(ஸ்)கிருதத்திலிருந்து தோன்றிய மொழி என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியின் மூல மொழி துருக்கி. அதில் சமஸ்கிருதம், உருது, அரபி போன்ற மொழிச்சொற்களும் சேர்ந்து உருவானதுதான் இந்தி. உண்மையில் சம(ஸ்)கிருதம் மற்ற மொழிகளில் எவ்வாறு கலந்திருக்கிறதோ அது போலவே இந்தியிலும் அதிகமாகக் கலந்துள்ளது. குருகுலம் இருந்தபோது அனைத்துத் தரப்பு மக்களும் தமிழ், சம(ஸ்)கிருதம் இரண்டுமே கற்றனர். காலப்போக்கில் பூசாரிகளே சம(ஸ்)கிருதம் கற்றனர். சாதாரண மக்களுக்கு அதனால் பயனில்லாததால் கற்பதைத் தொடரவில்லை. இன்று தமிழ்நாட்டில் தமிழ் பயன்பாடு குறைந்து ஆங்கிலம் வளர்வது போல, மக்கள் தமக்கு எதனால் பயன்பாடு உள்ளதோ அதனையே கற்றனர். சித்தர் தமிழை நிறைவாகக் கற்றோனே கசடு அறக் கற்றவன். வள்ளுவப் பெருமான் மாபெரும் சித்தர். இதை வெகுவிரைவில் பாரறியும். தமிழ் சித்தன் மொழி. மெஞ்ஞான சூட்சுமங்கள் நிறைந்த நிறைமொழி. சித்தர்கள் அழிய மாட்டார்கள். ஆதலால், அவர்கள் மொழியான தமிழ் என்றுமே அழியாது. வருங்காலத்தில் உலகமாந்தரே தமிழ் கற்பர். ஏனெனில் சித்தர் மொழியான தமிழைக் கற்றாலே வரப்போகும் ஊழிக்கூத்திலிருந்து உலகமாந்தர் தம்மைக் காக்க முடியும். 2037க்கு முன் ஞானச்சித்தர் காலம் பிறக்கும். மீண்டும் சித்தர்கள் இம்மண்ணில் எம்முன்னே நடமாடுவர். உலகமாந்தரெல்லாம் தம்மைக் காத்துக்கொள்ளும் பொருட்டு சித்தநெறியை நாடுவர். சித்தநெறியிலுள்ள மறைபொருளையறிய வேண்டி தமிழ் கற்பர். ‪#‎சித்தர்வாக்கு‬ நம்மால் ஆதாரம் தர முடியவில்லை. இருந்தும் ஒரு தகவலாகத் தருகிறேன். அதாவது, சித்தர் ஓலைக் குறிப்புகளின் படி தமிழ் பல அண்டங்களில் பேசப்படுகின்றது. சித்தர்கள் மொழியான தமிழ் காலம் வரையறுக்கப்பட முடியாத ஆதிமொழி. மூத்தகுடி தமிழ்க்குடி . இதோ ஒரு சான்று: http://www.bibliotecapleyades.net/esp_galacticdiplomacy_02.htm The Pleiades is an open star cluster consisting of 254 stars and many times that in planetary bodies. Many of the stars are very young. The Pleiades is located in the constellation of Taurus. The Pleiadian and Earth alphabets are both very similar. This was noted about 11,157 years ago. The script form was developed here on Earth and carried back to the seven sisters. The original script form is the parent of most of our present day alphabets. All of Earths languages are derived from a ancient Pre-Sumerian language called Tamil which was spoken in Lyra and latter in the Pleaides. http://www.bibliotecapleyades.net/esp_galacticdiplomacy_02.htm REFS: Turkey the birthplace of Hindi, English: study http://phys.org/news/2012-08-turkey-birthplace-hindi-english.html his proposed research center may be defined as an academic research section of any university, with the prime object to unearth and to bring to light, the linguistic, cultural, scientific and medical heritage of the Tamil people as recorded by the Germans over the past 300 years and also to investigate and estimate the Tamilo=German interactions in these areas. http://www.germantamilology.com/research_centre.htm Do you know that Thiruvachagam and Thiruppavai are sung during the annual coronation ceremony for the King in Thailand? http://www.indiadivine.org/audarya/sri-vaishnava-forum/131559-tiruppavai-thailand.html Of the one-lakh odd inscriptions in India, about 60,000 were in Tamil Nadu. And of the 60,000 inscriptions, only about 5 per cent were in other languages such as Telugu, Kannada, Sanskrit and Marathi; the rest were in Tamil, T. Sathyamurthy, Superintending Archaeologist of ASI, Southern India, said. http://www.hindu.com/2005/11/22/stories/2005112215970400.htm மேலும் தகவல்கள்@ http://www.facebook.com/groups/siddhar.science/ தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம். http://www.facebook.com/groups/siddhar.science/ Tamil Words in Sanskrit These words are taken from the book ‘A Dravidian Etymological Dictionary’ by T. Burrow and M.B. Emeneau. Dr. T. Burrow was a professor Sanskrit in the University of Oxford, England. Dr. Ememeau was a professor of Sanskrit at University of California, Berkeley. They are both Dravilian language scholars as well. அகத்தி – Skrit agasti அகில் – Skrit aguru, agaru அக்கா – Skrit akka, Prak akka அங்கம் (battle) – Skrit anka அங்காடி – Skrit angana அடு (cook – அடுப்பு comes from this) – Skrit atta அடை (shut) – Skrit addana (shield), Prak adda அட்டம் (terraced roof) – Skrit atta, attala அத்தன் (father) root for அத்தை, அத்தான் – Skrit atta (mother, mothers sister, elder sister), Prak atta (mother, mother-in-law, father’s sister’s husband அம்மா – Skrit ambaa, ambaada, ambaala, ambi, ambaalikaa, Prak ammo, ammahe அரக்கு – Skrit laaksaa அல (suffer) – Skrit alasa, lampata அலங்கு – Skrit alaka அலங்கோலம் – Skrit kallola அல்குல் (part below the stomach) – Skrit alga அவணம் (a measure of 20 thousand areca nuts) – Skrit armana அழல் – Skrit arajf, alaji அழிஞ்சில் (sage-leaved alangium) – Skrit ankota ஆமாந்தம் ஆமணக்கு – Skrit aamanda ஆர் (ஆரவாரம்) – Skrit rat (to howl, yell, roar) இருவேரி (அறுகு – cuscuss grass) – Skrit hrivera ஈந்து (date palm) – Skrit hintala, Prak sindhi உக்கம் (waist) – Skrit ukha உடுக்கை – Skrit hudukka உலக்கை – Skrit ulukhala உருவை (a kind of fish) – Skrit ulupin (porpoise) உளு (rotten) – Skrit luta எலும்பு – Skrit eduka ஐயா (sound of astonishment) – Skrit aye (sound of excitement) ஒட்டு (to wager, noun ஒட்டம்) – Prak huddaa கசடு (dregs) – Skrit kaccara கச்சை – Skrit kaksya கடம்பை (hornet, wasp) – Skrit kanabha, gandhall, gandholi கடாரம் கிடாரம் (copper boiler) – Skrit kataha கடு (throbbing pain) – Skrit katu, katuka கட்டில் – Skrit khatva கட்டு (harden) – Skrit kathina, kathara, kathura கட்டை (dead body) – Skrit kata கணவீரம் (red oleander) – Skrit karavira, Prak karavira கணை – Skrit kana காப்பு – Skrit kavasa காப்பு – கவ்வு – Skrit kavala கம்பு (millet) – Skrit kambu கய (கசப்பு) – Skrit kasaya கர (to steal) – Skrit khar கரடி – Prak karada (tiger) கரடி (கரடிப்பறை, drum) – Skrit karata கரடு – Skrit karata, karkara, karkasa Prak karakaya கல் (learn, கலை came from this) – Skrit kala கல – to mix கலங்கு – Skrit kalaha கலம் – Skrit kala (boat), kalasa கவண் – Skrit gophana கவுளி (lizard) – Skrit godha கழல் (loosen) – Skrit cancalaksi கழுத்து – Skrit kandha கள் (களவு, rob) – Skrit khala கள் (toddy, alcohol) – Skrit kad (to be intoxicated) களம் – Skrit khala களி – Skrit kali கற – Skrit kara, kaara (to squeeze out tax) கறு (black) – Skrit karpari கனம் – Skrit ghana கனல் – Skrit kanala (shining), kanaka (gold) கா (கம்பு, pole) – Skrit kaaca, kaajam Prak kaa, kaava, kavada கா (forest) – Skrit kanana காக்கை (crow) – Skrit kaka காசு – Skrit karsa காண் – Skrit kaana கால் (கால்வாய்) – Skrit khalla, Prak khalla, khaala கார் (black) – Skrit kaala கின்னேணல், கிணி – Skrit kinkini, Prak kinikininta கீல் (hinge) – Skrit kila கீறு – Skrit kiraka குச்சு (tuft) – Skrit kurca, gucha, gulucha குடசம் – Skrit kutaja குடம் – Skrit kuda குடி (to drink, intoxicated by drinking) – Skrit kudi (intoxicated by drinking) குடுகுடு (rattle) – Skrit gudagudayana (grumbling of belly), gurguri (hookah) குடை – Skrit utkuta குட்டம் (pond) – Skrit kunda குட்டு – Skrit kuttayaati குந்தாலி (pick-axe) – Skrit kuddaala குயில் – Skrit kokila குருள் (curl) – Skrit kurula, kurala குரை (dog bark) – Skrit kurkura குழை (soften) – Skrit kunapa (dead body, rotting) குளகம் (grain measure) – Skrit kudava, kudapa குளம் – Skrit kula குறிஞ்சி – Skrit kuranta, kurantaka குன்றி (crab’s eye) – Skrit kuncika, gunja கூ (bird cry) – Skrit ku, kuj கூம்பு (குவளை comes from this) – Skrit kuvalaya, kuvala, kuvela கூம்பு (ship mast) – Skrit Kupaka, Prak kuvaya கூழ் – Skrit kura கெண்டை (ankle) – Skrit ganda, gandu சென்னி (head) – Skrit kenaara (temples, upper part of cheek) சேம்பு (கிழங்கு) – Skrit kemuka, kecuka, kevuka, kacu, kacvi சேறு – Skrit kedaara (field under water) கோடாலி – Skrit kuthaara கொடி (flag, banner) – Skrit koti, kuta கொடு (curved, bent) – Skrit kutila கொட்டகை – Skrit gostha கொதி – Skrit kutuka, kutuhala கொக்கு – Skrit kanka கொழுந்து – Skrit koraha, kora, kunaka (new born animal) கோணல் – Skrit kona கோணி (sack) – Skrit goni கோலம் (raft) – Skrit kola கோவணம் – Skrit kaupina சடசடஎனல் – Skrit catacatayaayate சடை – Skrit jada சட்டுகம் (சட்டுவம்) – Skrit catuka செண்பகம் – Skrit chempaka சதி – Skrit chad சதுர் (skill) (ancient Tamil dance சதிராட்டம் comes from this word) – saduvaari சந்தம் (beauty) – Skrit chanda சப்பட்டை – Skrit carpata சப்பை (tasteless) – Skrit capata அரவு (snake) – Skrit saraahaya சல்லடம் (short drawers) – Skrit candaataka, calanaka (short petticoat) சரக்க (quickly) – Skrit sraak சலி (to sieve) – Skrit sal சா (சாவு) – Skrit sava (corpse) சாய் (சாயம், brilliance) – Skrit chaaya சிட்டிகை (snap fingers) – Skrit chotikaa சிப்பி (shell) – Skrit sippi சிமிர், இமை – Skrit smil சூப்பு – Skrit coop சீரை, சீலை – Skrit cela (clothes, garments) சுண்டன், சுண்டெலி – Skrit sundi-musaka, cucundari, chucchundara சுலவு (easy) – Skrit sulabha சூடகம் (bracelet) – Skrit cuda, Prak cuda சூடு (to wear) – Skrit cuda சுட்டு (private parts) – Skrit cuta, cuti, cyuti செடி (light, splendor) – Skrit tadit எய், எய்பன்றி (porcupine) – Skrit sedhaa சொகுசு (refinement) – Skrit coksa நாஞ்சில் – Skrit langala தமதமவென (drum sound) – Skrit dam (drum sound) தகரம் – Skrit tamara தசை – Skriti tharasa தடு (hinder) – Skrit tadaga தட்டி (screen) – Skrit thatti தட்டி (drawers) – Skrit dhati தண் (cool) – Prak tannaaya தண்டு – Skrit thankaka தமுக்கம் – Skrit thamaanga தமிழ் – Skrit Dravida தளர் – Skrit tarala தாத்தா – Skrit thaatha தாமரை – Skrit taamarasa தார், தாரம் (rope) – Skrit davara (string), doraka (rope) தாழ் (bolt) – Skrit tadaka து (துண்ணு) – Skrit tuppa (ghee) துகில் – Skrit dukula தும்பி (ebony tree) – Skrit tumburu துழாய், துளசி, துளவம், துளவு (holy basil) – Skrit thulasi துறு (crowded) – Skrit turumba தூவல் (feather), தூய் (cotton) – Skrit tuva (cotton) தூற்று – Skrit surpa தெப்பம் – Skrit tarpa, Prak tappa தெரிவை (young women) – Skrit taruna தொண்டை (creeper) – Skrit tundi தோசை – Skrit dhosaka நகர் (big house, street, mansion, palace) – Skrit nagara (city) நந்து (flourish) – Skrit nand (to rejoice) நல் – Skrit nala நாத்தனார் – Skrit naanandr, nandini, nandaa நீர் – Skrit nira (water, juice, liquor) நுதல் – Skrit nithaala நேர் (straightforward)- Skrit nerimi (knowledge) நொச்சி (vitex negundo tree) – Skrit nirgundi பட்டி (lawless) – Skrit patu பட்டி (cow stall), பட்டம், பட்டு (small town) – Skrit pattana (city) பண்டி (cart) – Skrit bhandi பண்டி (belly), பண்டம் – Skrit phanda பப்படம், அப்பளம் – Skrit parpaata பரு (coarse) – Skrit parusa பலவு, பலா (jackfruit tree) – Skrit panasa, palasa, phanasa பல்லி – Skrit palli, pallika பவளம், பளகம் – Skrit pravaala பழு, பழம் – Skrit phala பாதிரி (trumpet flower) – Skrit paatala, paatali பாலம் – Skrit paali பிச்சு (bile) – Skrit pitta பிழி (squeeze), பிண்டி (oil cake) – Skrit pinyaka (oil cake) பிள்ளை – Skrit pillika பீலி – Skrit piccha புழு – Skrit pilu (vermin), pulava (worm), Hindi pillu (worm), phul (maggots) புழுங்கு (parboiled) – Skrit pulaaka (a lump of rice) புழுகு (arrowhead) – Skrit punkha (shaft or feathered part of arrow) புழுதி – Skrit bhuti பூசு – Skrit pusta பெட்டி – Skrit petaka, petika பெண் – Skrit panda, pandaka பேடி – Skrit potaa போத்து (male animals, tender branch) – Skrit pota (young animal) மணி – Skrit mani மத (anger) – Skrit mad மலை – Skrit malaya மல்லம் (bowl) – Skrit malli, mallaka மா (mango) – Skrit maakanda மேடை – Prakrit maadia மால் (confused) – Skrit malaka (intoxicating drink) மாலை – Skrit maala மாலர் (child of brahmin mother and sudra father) – Skrit maala மீன் – Skrit meena முகிர் (bud) – Skrit mukula மூங்கா (mongoose) – Skrit magdusa, Prakrit mamgusa, muggasa, Hindi mugus மூசரு, மோரு – Skrit morata, morana முட்டு – Skrit mut முதலை – Skrit maacala முத்து – Skrit muktha, prakrit muttaa முரள் (sound), முர, முரழல், முரவம் – Skrit murali (flute), muraja (drum) முரவு – Prakrit muriya முருங்கை – Skrit murungi, muangi முல்லை – Skrit mallika முள்ளங்கி – Skrit mullaka மூடை – Skrit mutaaka மேதி, வெந்தயம், மெந்தியம் – skrit mantha, methi மை – Skrit masi மொட்டை – Skrit munda வசம், வசம்பு – Skrit vasaa வம்பு (curved bamboo) Skrit bambu வலை – Skrit val (turn around), valaya (circle) விளையாட்டு – Skrit vilaasa வீசு (fan) – Skrit vij, vyaj வெருகு (tom cat) – Skrit biraara, billaala, bidaala விளாம், வெளில் – Skrit bilva

Wednesday, January 8, 2014

மனித உடல் ஓர் அதிசயம் !!



மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறை கண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.

உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.

நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன

இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.

நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன.

Sunday, January 5, 2014

அபிமன்யுவின் வீரம்..!



சிறுவன் ஒருவன் சாதனைகளைச் செய்ய முடியுமா? நிச்சயமாய் முடியும். அபிமன்யுவின் வரலாறை படிக்கும் குழந்தைகள் பெரும் சாதனையாளர்களாக மாறுவார்கள். அர்ஜூனனின் மனைவி சுபத்ரா. துவாரகை மன்னன் பலராமன், கண்ணன் ஆகியோரின் தங்கை. அவளுக்கு ஆனைப்பட்டணம் என்ற ஊரை சீதனமாக அளித்தார் பலராமன். சுபத்ரா கர்ப்பமாக இருந்த நேரத்தில் அண்ணன் கண்ணனிடம் போர் முறைகளைப் பற்றி கேட்டாள். கண்ணன் சொல்ல ஆரம்பித்தார். எப்படியெல்லாம் போரில் யூகங்கள் வகுக்கப்படும், அதிலிருந்து எப்படியெல்லாம் வீரர்கள் தப்புவார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவரது விளக்கம் சுபத்ராவுக்கு போரடித்து விட்டது போலும். உம் கொட்டிக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தவள் அப்படியே தூங்கி விட்டாள். ஆனால் உம் சத்தம் மட்டும் வந்து கொண்டே இருந்தது. சுபத்ராவின் வயிற்றில் இருந்த குழந்தை தான் அது.போர் முறைகளைப் பற்றிக் கவனமாகக் கேட்டுக் கொண்டே உம் கொட்டியது. கண்ணன் அப்போது சக்ர வியூகம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அதை அமைக்கும் விதத்தைச் சொல்லி முடித்த அவர், தங்கையைக் கவனித்தார். தங்கை அயர்ந்து உறங்கி விட்டதைப் பார்த்து எழுந்து விட்டார். சக்ரவியூகத்தில் இருந்து தப்பிக்கும் வழியைச் சொல்வதற்குள் தங்கை தூங்கி விட்டதால் கண்ணன் பாதியில் முடித்து விட்டார். கருவில் இருக்கும் போதே வீரக்கதை கேட்ட அந்த குழந்தைதான் அபிமன்யு. அவன் பிறந்ததும், பலராமனுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சுந்தரி என பெயர் சூட்டினர். அவள் அழகில் சிறந்து விளங்கினாள். இருவரும் வளர்ந்ததும், திருமணம் செய்து வைத்து விடுவோம் என பேசி முடித்தனர். ஆண்டுகள் கடந்தன. அபிமன்யு தன் மாமா பலராமனிடம் வித்தைகள் பல கற்றான். தனிடையே அபிமன்யுவின் தந்தை அர்ஜூனன், நாடிழந்து வனவாசம் சென்று விட்டான். சுபத்ரா தனியாக இருந்ததால், அபிமன்யு தாய்க்கு துணையாகச் சென்று விட்டான். இளம் பருவத்திலேயே திருமணம் பேசி முடித்ததால், அபிமன்யு மீது சுந்தரி தீராக்காதல் கொண்டிருந்தாள்.

சுந்தரிக்கு மணம் முடிக்க ஏற்பாடு ஆனது. இந்த நிலையில் சகுனி துரியோதனனிடம் ஒரு யோசனை சொன்னான். துரியோதனா! பலராமன் நம் பக்கம் இருப்பது எபபோதுமே நல்லது. அவனது உறவு நிலையாக இருக்க வேண்டுமானால், உனது மகன் லக்குவனுக்கு பலராமனின் மகள் சுந்தரியை மணம் முடித்து விடு. உறவு பலப்படும், என்றான். துரியோதனனுக்கு இந்த யோசனை நல்லதாகத் தெரிந்தது. பலராமனுக்கு ஓலை அனுப்பினான். பலராமனுக்கு பெரும் மகிழ்ச்சி. துரியோதன மகாராஜா பாண்டவர்களின் ராஜ்யத்தையும் வெற்றி கொண்டு பரந்த நிலப்பரப்பை வைத்திருக்கிறார். அவரது வீட்டில், நீ வாழ்ந்தால் மிகுந்த செல்வச் செழிப்புடன் இருப்பாய், என மகளுக்கு அறிவுரை கூறினார் தந்தை. மகளால் தந்தையை எதிர்த்து பேச முடியவில்லை. ஆனால் அழுகை பீறிட, ஆபத்தாந்தவனான தன் சித்தப்பா கண்ணனிடம் புகார் சொன்னாள். பாருங்கள் சித்தப்பா! உங்கள் அண்ணன் செய்வது நியாயமா? அபிமன்யுவுக்கும், எனக்கும் காதல் வளர காரணமாக இருந்து விட்டு, இப்படி செய்யலாமா? என்றாள். கண்ணனும் அண்ணனிடம் பேசிப் பார்த்தார். அண்ணன் ஒப்புக் கொள்ளவில்லை. ஏற்கனவே நம் தங்கையை கட்டிக் கொடுத்து விட்டு அவள் கணவனுடன் வாழ இயலாமல் கஷ்டப்படுவது போதாதா? இன்னும் நம் மகளை வேறு அந்தக்குடும்பத்தில் திருமணம் செய்விக்க வேண்டுமா? அங்கே பொருள் இல்லையே. மகள் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் சிரமப்பட வேண்டுமா? சிறுவயதில் விளையாட்டாக பேசியதை எல்லாம் பொருட்படுத்தக் கூடாது. நீ கவுரவர்களை வரவேற்கும் ஏற்பாட்டைச்செய், என கண்ணனை விரட்டி விட்டார் பலராமன். கண்ணன் அண்ணனை எதிர்த்துப் பேச முடியாமல் போய் விட்டார். சுந்தரி நேரடியாக ஒரு ஓலையை அபிமன்யுவுக்கு அனுப்பி விட்டாள். அபிமன்யு ஆத்திரம் கொண்டான். சுபத்ராவால் இதை நம்பமுடியவில்லை. நேரடியாக அண்ணன் வீட்டுக்குச் சென்று, நியாயம் கேட்பதற்காக மகனுடன் புறப்பட்டாள். செல்லும் வழியில் அவளுக்கு கடும் சோர்வு ஏற்பட்டது. தாயும், மகனும் காட்டில் ரதத்தை நிறுத்தி விட்டு ஓய்வெடுத்தனர்.

அப்போது, ஒரு அரக்கன் அங்கு வந்தான். அவன் தனது காட்டில் அனுமதியின்றி தங்கிய அபிமன்யுவை எதிர்த்தான். அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அவன் அபிமன்யுவைக் கொன்று விட்டான். சுபத்ரா துடித்தாள். அவளது அழுகுரல் கேட்டு வனதேவதை அங்கு தோன்றினாள். அவள் ஒரு மந்திரத்தை உபதேசித்தாள். அதைச் சொல்லி மகனின் கன்னத்தில் வருடினாள் சுபத்ரா. அபிமன்யு உயிர் பெற்று எழுந்தான். எழுந்த வேகத்தில் தன்னுடன் போராடிய கடோத்கஜனையும், அவனைச் சேர்ந்த வீரர்களையும் கொன்று விட்டான். இதைக் கேள்விப்பட்டு கடோத்கஜனின் தாயார் அங்கு ஓடிவந்து அரற்றினாள். மகனே! நீ இறந்த விபரத்தை உன் தந்தை பீமனிடம் எப்படி சொல்வேன், என்று புலம்பினாள். அதன்பிறகு தான் இறந்தது பீமனின் மகன் என்பது தெரிந்தது. இறந்தது தனது சகோதரன் என்பதை அதன்பிறகே அபிமன்யு தெரிந்து கொண்டான். சுபத்ரா மனமிறங்கி, வனதேவதை சொல்லித் தந்த மந்திரத்தைச் சொல்லி கடோத்கஜனையும், மற்றவர்களையும் எழுப்பினாள். நடந்ததை அறிந்த கடோத்கஜன், மகிழ்ந்து தம்பி அபிமன்யுவுக்கு உதவ முன்வந்தான். அவர்களை காட்டிலேயே இருக்கச் சொல்லி விட்டு, பெண் வேடம் பூண்டு பலராமனின் நாட்டுக்குள் சென்றான். அவனும், அவனோடு உருமாறி வந்த பெண்களும் அரண்மனைக்குள் மாப்பிள்ளை வீட்டார் என சொல்லிப் புகுந்தனர். அங்கு சென்றதும் அவன் சுந்தரி போல உருவத்தை மாற்றிக் கொண்டு, முகூர்த்த சமயத்தில் மாப்பிள்ளை லக்குவன் பக்கத்தில் அமர்ந்தான். அவன் தாலி கட்ட வரும்போது, தனது அரக்க உருவத்தைக் காட்டினான். அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதற்குள் சுந்தரியை வான் வழி தூக்கிச்சென்றான் கடோத்கஜன். அதற்குள் கண்ணனும் பலராமனுக்கு தெரியாமல், காட்டிற்கு வந்தார்.

அபிமன்யுவுக்கும், சுந்தரிக்கும் அங்கேயே திருமணம் நடந்தது. இருவரும் பின்பு பலராமனைச் சந்தித்து ஆசிபெற்றனர். முதலில் கோபப்பட்டாலும், பின்பு சமாதானமாகி விட்டார் அவர். இதன்பிறகே குருஷேத்திர யுத்தம் நடந்தது. தர்மரை எப்படியும் சிறைபிடிப்பேன் என துரோணர் சபதம் எடுத்தார். இதற்காக பாண்டவர்களை அவரிடமிருந்து பிரித்து, வெவ்வேறு இடத்திற்கு கூட்டிச் சென்று விட்டால், அவரைப்பிடிப்பது எளிதாகும் என திட்டமிடப்பட்டது. அதன்படியே திட்டத்தையும் செயல்படுத்தினார்கள். பல்வேறு திசைகளிலிருந்து படைகள் பாய்ந்து வந்தன. அவர்கள் எல்லாரையும் தடுக்க திசைக்கு ஒருவராக எல்லாரும் பிரிந்தனர். தர்மர் தனித்து நின்ற போது, அபிமன்யு மட்டுமே பெரியப்பாவுக்கு பாதுகாப்பாக நின்றான். அவன் இளைஞன் தானே என்று, யாரும் கண்டு கொள்ளாமல் தர்மரை நெருங்கினர். ஆனால் அவனது வீரத்தின் முன் யாரும் நிற்கமுடியவில்லை. இதைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். சக்ர வியூகம் அமைத்தால் மட்டுமே அவனைப் பிடிக்க முடியும் என்ற நிலைமை வந்தது. சக்ரவியூகத்தையும் உடைத்த அபிமன்யு கடுமையாகப் போரிட்டான். பலரை அம்பெய்து கொன்றான். ஆனால் அந்த வியூகத்தில் இருந்து எப்படி வெளியேறுவது என தெரியவில்லை. பலமுயற்சிகள் செய்தும் வெளிவர முடியாத அவனைக் கொன்றனர் எதிரிகள். இதற்குள் மற்ற படைகளை முறியடித்து விட்டு சகோதரர்கள் தர்மனையும் பாதுகாத்தனர். வீர மரணம் அடைந்த அபிமன்யுவைக் கண்டு அரற்றி அழுதான் அர்ஜூனன். அதற்கு பழிக்குப் பழிவாங்கும் வகையில் கவுரவ படைகளை அழித்து வெற்றி அடைந்தான்.
அபிமன்யுவின் வீரம்..!

சிறுவன் ஒருவன் சாதனைகளைச் செய்ய முடியுமா? நிச்சயமாய் முடியும். அபிமன்யுவின் வரலாறை படிக்கும் குழந்தைகள் பெரும் சாதனையாளர்களாக மாறுவார்கள். அர்ஜூனனின் மனைவி சுபத்ரா. துவாரகை மன்னன் பலராமன், கண்ணன் ஆகியோரின் தங்கை. அவளுக்கு ஆனைப்பட்டணம் என்ற ஊரை சீதனமாக அளித்தார் பலராமன். சுபத்ரா கர்ப்பமாக இருந்த நேரத்தில் அண்ணன் கண்ணனிடம் போர் முறைகளைப் பற்றி கேட்டாள். கண்ணன் சொல்ல ஆரம்பித்தார். எப்படியெல்லாம் போரில் யூகங்கள் வகுக்கப்படும், அதிலிருந்து எப்படியெல்லாம் வீரர்கள் தப்புவார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவரது விளக்கம் சுபத்ராவுக்கு போரடித்து விட்டது போலும். உம் கொட்டிக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தவள் அப்படியே தூங்கி விட்டாள். ஆனால் உம் சத்தம் மட்டும் வந்து கொண்டே இருந்தது. சுபத்ராவின் வயிற்றில் இருந்த குழந்தை தான் அது.போர் முறைகளைப் பற்றிக் கவனமாகக் கேட்டுக் கொண்டே உம் கொட்டியது. கண்ணன் அப்போது சக்ர வியூகம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அதை அமைக்கும் விதத்தைச் சொல்லி முடித்த அவர், தங்கையைக் கவனித்தார். தங்கை அயர்ந்து உறங்கி விட்டதைப் பார்த்து எழுந்து விட்டார். சக்ரவியூகத்தில் இருந்து தப்பிக்கும் வழியைச் சொல்வதற்குள் தங்கை தூங்கி விட்டதால் கண்ணன் பாதியில் முடித்து விட்டார். கருவில் இருக்கும் போதே வீரக்கதை கேட்ட அந்த குழந்தைதான் அபிமன்யு. அவன் பிறந்ததும், பலராமனுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சுந்தரி என பெயர் சூட்டினர். அவள் அழகில் சிறந்து விளங்கினாள். இருவரும் வளர்ந்ததும், திருமணம் செய்து வைத்து விடுவோம் என பேசி முடித்தனர். ஆண்டுகள் கடந்தன. அபிமன்யு தன் மாமா பலராமனிடம் வித்தைகள் பல கற்றான். தனிடையே அபிமன்யுவின் தந்தை அர்ஜூனன், நாடிழந்து வனவாசம் சென்று விட்டான். சுபத்ரா தனியாக இருந்ததால், அபிமன்யு தாய்க்கு துணையாகச் சென்று விட்டான். இளம் பருவத்திலேயே திருமணம் பேசி முடித்ததால், அபிமன்யு மீது சுந்தரி தீராக்காதல் கொண்டிருந்தாள்.

சுந்தரிக்கு மணம் முடிக்க ஏற்பாடு ஆனது. இந்த நிலையில் சகுனி துரியோதனனிடம் ஒரு யோசனை சொன்னான். துரியோதனா! பலராமன் நம் பக்கம் இருப்பது எபபோதுமே நல்லது. அவனது உறவு நிலையாக இருக்க வேண்டுமானால், உனது மகன் லக்குவனுக்கு பலராமனின் மகள் சுந்தரியை மணம் முடித்து விடு. உறவு பலப்படும், என்றான். துரியோதனனுக்கு இந்த யோசனை நல்லதாகத் தெரிந்தது. பலராமனுக்கு ஓலை அனுப்பினான். பலராமனுக்கு பெரும் மகிழ்ச்சி. துரியோதன மகாராஜா பாண்டவர்களின் ராஜ்யத்தையும் வெற்றி கொண்டு பரந்த நிலப்பரப்பை வைத்திருக்கிறார். அவரது வீட்டில், நீ வாழ்ந்தால் மிகுந்த செல்வச் செழிப்புடன் இருப்பாய், என மகளுக்கு அறிவுரை கூறினார் தந்தை. மகளால் தந்தையை எதிர்த்து பேச முடியவில்லை. ஆனால் அழுகை பீறிட, ஆபத்தாந்தவனான தன் சித்தப்பா கண்ணனிடம் புகார் சொன்னாள். பாருங்கள் சித்தப்பா! உங்கள் அண்ணன் செய்வது நியாயமா? அபிமன்யுவுக்கும், எனக்கும் காதல் வளர காரணமாக இருந்து விட்டு, இப்படி செய்யலாமா? என்றாள். கண்ணனும் அண்ணனிடம் பேசிப் பார்த்தார். அண்ணன் ஒப்புக் கொள்ளவில்லை. ஏற்கனவே நம் தங்கையை கட்டிக் கொடுத்து விட்டு அவள் கணவனுடன் வாழ இயலாமல் கஷ்டப்படுவது போதாதா? இன்னும் நம் மகளை வேறு அந்தக்குடும்பத்தில் திருமணம் செய்விக்க வேண்டுமா? அங்கே பொருள் இல்லையே. மகள் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் சிரமப்பட வேண்டுமா? சிறுவயதில் விளையாட்டாக பேசியதை எல்லாம் பொருட்படுத்தக் கூடாது. நீ கவுரவர்களை வரவேற்கும் ஏற்பாட்டைச்செய், என கண்ணனை விரட்டி விட்டார் பலராமன். கண்ணன் அண்ணனை எதிர்த்துப் பேச முடியாமல் போய் விட்டார். சுந்தரி நேரடியாக ஒரு ஓலையை அபிமன்யுவுக்கு அனுப்பி விட்டாள். அபிமன்யு ஆத்திரம் கொண்டான். சுபத்ராவால் இதை நம்பமுடியவில்லை. நேரடியாக அண்ணன் வீட்டுக்குச் சென்று, நியாயம் கேட்பதற்காக மகனுடன் புறப்பட்டாள். செல்லும் வழியில் அவளுக்கு கடும் சோர்வு ஏற்பட்டது. தாயும், மகனும் காட்டில் ரதத்தை நிறுத்தி விட்டு ஓய்வெடுத்தனர்.

அப்போது, ஒரு அரக்கன் அங்கு வந்தான். அவன் தனது காட்டில் அனுமதியின்றி தங்கிய அபிமன்யுவை எதிர்த்தான். அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அவன் அபிமன்யுவைக் கொன்று விட்டான். சுபத்ரா துடித்தாள். அவளது அழுகுரல் கேட்டு வனதேவதை அங்கு தோன்றினாள். அவள் ஒரு மந்திரத்தை உபதேசித்தாள். அதைச் சொல்லி மகனின் கன்னத்தில் வருடினாள் சுபத்ரா. அபிமன்யு உயிர் பெற்று எழுந்தான். எழுந்த வேகத்தில் தன்னுடன் போராடிய கடோத்கஜனையும், அவனைச் சேர்ந்த வீரர்களையும் கொன்று விட்டான். இதைக் கேள்விப்பட்டு கடோத்கஜனின் தாயார் அங்கு ஓடிவந்து அரற்றினாள். மகனே! நீ இறந்த விபரத்தை உன் தந்தை பீமனிடம் எப்படி சொல்வேன், என்று புலம்பினாள். அதன்பிறகு தான் இறந்தது பீமனின் மகன் என்பது தெரிந்தது. இறந்தது தனது சகோதரன் என்பதை அதன்பிறகே அபிமன்யு தெரிந்து கொண்டான். சுபத்ரா மனமிறங்கி, வனதேவதை சொல்லித் தந்த மந்திரத்தைச் சொல்லி கடோத்கஜனையும், மற்றவர்களையும் எழுப்பினாள். நடந்ததை அறிந்த கடோத்கஜன், மகிழ்ந்து தம்பி அபிமன்யுவுக்கு உதவ முன்வந்தான். அவர்களை காட்டிலேயே இருக்கச் சொல்லி விட்டு, பெண் வேடம் பூண்டு பலராமனின் நாட்டுக்குள் சென்றான். அவனும், அவனோடு உருமாறி வந்த பெண்களும் அரண்மனைக்குள் மாப்பிள்ளை வீட்டார் என சொல்லிப் புகுந்தனர். அங்கு சென்றதும் அவன் சுந்தரி போல உருவத்தை மாற்றிக் கொண்டு, முகூர்த்த சமயத்தில் மாப்பிள்ளை லக்குவன் பக்கத்தில் அமர்ந்தான். அவன் தாலி கட்ட வரும்போது, தனது அரக்க உருவத்தைக் காட்டினான். அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதற்குள் சுந்தரியை வான் வழி தூக்கிச்சென்றான் கடோத்கஜன். அதற்குள் கண்ணனும் பலராமனுக்கு தெரியாமல், காட்டிற்கு வந்தார்.

அபிமன்யுவுக்கும், சுந்தரிக்கும் அங்கேயே திருமணம் நடந்தது. இருவரும் பின்பு பலராமனைச் சந்தித்து ஆசிபெற்றனர். முதலில் கோபப்பட்டாலும், பின்பு சமாதானமாகி விட்டார் அவர். இதன்பிறகே குருஷேத்திர யுத்தம் நடந்தது. தர்மரை எப்படியும் சிறைபிடிப்பேன் என துரோணர் சபதம் எடுத்தார். இதற்காக பாண்டவர்களை அவரிடமிருந்து பிரித்து, வெவ்வேறு இடத்திற்கு கூட்டிச் சென்று விட்டால், அவரைப்பிடிப்பது எளிதாகும் என திட்டமிடப்பட்டது. அதன்படியே திட்டத்தையும் செயல்படுத்தினார்கள். பல்வேறு திசைகளிலிருந்து படைகள் பாய்ந்து வந்தன. அவர்கள் எல்லாரையும் தடுக்க திசைக்கு ஒருவராக எல்லாரும் பிரிந்தனர். தர்மர் தனித்து நின்ற போது, அபிமன்யு மட்டுமே பெரியப்பாவுக்கு பாதுகாப்பாக நின்றான். அவன் இளைஞன் தானே என்று, யாரும் கண்டு கொள்ளாமல் தர்மரை நெருங்கினர். ஆனால் அவனது வீரத்தின் முன் யாரும் நிற்கமுடியவில்லை. இதைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். சக்ர வியூகம் அமைத்தால் மட்டுமே அவனைப் பிடிக்க முடியும் என்ற நிலைமை வந்தது. சக்ரவியூகத்தையும் உடைத்த அபிமன்யு கடுமையாகப் போரிட்டான். பலரை அம்பெய்து கொன்றான். ஆனால் அந்த வியூகத்தில் இருந்து எப்படி வெளியேறுவது என தெரியவில்லை. பலமுயற்சிகள் செய்தும் வெளிவர முடியாத அவனைக் கொன்றனர் எதிரிகள். இதற்குள் மற்ற படைகளை முறியடித்து விட்டு சகோதரர்கள் தர்மனையும் பாதுகாத்தனர். வீர மரணம் அடைந்த அபிமன்யுவைக் கண்டு அரற்றி அழுதான் அர்ஜூனன். அதற்கு பழிக்குப் பழிவாங்கும் வகையில் கவுரவ படைகளை அழித்து வெற்றி அடைந்தான்.

Saturday, January 4, 2014

பூமித்தாய்க்கு 5 கோடி ரூபாய் கடன கட்ரியா, இல்லை மரம் நடுரியா?!!!

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்.,

ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்.,
மூன்று சிலிண்டரின்விலை2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது.,
ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது., இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது...

அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்., மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்....,

இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்..

ஹா ஹா ஹா

மக்கு: இன்னிக்கு ஸ்கூல்ல வாத்தியார் என்னை பிரம்பால அடி அடீன்னு அடிச்சுட்டாரு!

ஜக்கு: ஏன் என்ன தப்பு செஞ்ச?

மக்கு: 33 எழுதச் சொன்னார்! தெரியலைன்னு முழுச்சேன், சரி 3 போட்டு பக்கத்துல 3 போடச்சொன்னாரு

ஜக்கு: இது கூட தெரியலையா?

மக்கு : ஒரு 3 போட்டுட்டேன், இன்னொரு 3-ஐ எந்தப் பக்கம் போடணும்னு கேட்டேன்

மருத்துவ குறிப்புகள்

நரம்பு சுண்டி இழுத்தால்...

ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும்.

நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.

பல்லில் புழுக்கள்

சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.

உடல் பருமன் குறைய...

வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.

வெண்மையான பற்களைப் பெற...

வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.

கணைச் சூடு குறைய...

கணைச் சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.

வலுவான பற்கள்

வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.

உடல் சூடு

ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

கற்கண்டு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்...

கற்கண்டு சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.

கக்குவான் இருமல்

வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.

உள்நாக்கு வளர்ச்சி

உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.

இரத்த சோகை

இரத்தசோகை நோய்க்கு தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து இருப்பதாகும்.
ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும்.

ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்.!



எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணைய்யை அதிகம் பயன்படுத்துபவர்கள் நாம். இது வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணை இதுதான். இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளில் எள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. எள்ளில் வெள்ளை எள், கறுப்பு எள், சிவப்பு எள் என்ற மூன்று வகை உண்டு. மேலும் காட்டெள், சிற்றெள், பேரெள் போன்ற வகைகளும் உண்டு.

* நல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

* நல்லெண்ணைய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.

* நல்லெண்ணைய்யை, 'இயற்கை நமக்கு அளித்த கொடை' என்று தாராளமாகச் சொல்லலாம். அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே அதற்குக் காரணம். நல்லெண்ணைய், புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றைத் தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றைத் தணிக்கிறது.

* நல்லெண்ணைய்யை தினமும் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழிமுட்டை வெண்கருவுடன் நல்லெண்ணைய் கலந்து பருக்களின் மீது பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும்.

* நல்லெண்ணைய் தேய்த்துக் குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல், மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும் என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Friday, January 3, 2014

ஜோக்

பஸ்ஸில் இரண்டு பெண்கள் சண்டை போட்டு கொடிருந்தார்கள் *.

ஒருத்தி ஜன்னலை மூட சொல்லி..இன்னொருத்தி ஜன்னலை திறக்க சொல்லி!

ஏனென்றால் காற்று இருந்தால் மூச்சு திணறி செத்து விடுவேன் என்றும்,காற்று இல்லையென்றால் மூச்சு திக்கி செத்து விடுவேன் என்றும் பஞ்சாயத்து.

கூட்டத்தில் இருந்த பெரியவர் கண்டக்டரிடம் சொன்னார்.
முதலில் ஜன்னலை மூடுங்கள்..
ஒருத்தி செத்து விடுவாள், தொல்லை தீந்துடும்.

அப்புறமா ஜன்னலை திறங்க இன்னொருத்தியும் * செத்து விடுவாள். பிரச்சினை சால்வ்டு!

சண்டையை எப்படி நிறுத்துவது என்று மூச்சு திணற யோசித்துக் கொண்டிருந்த கண்டக்டருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

எப்படி அய்யா இது மாதிரி ஒரு யோசனை உங்களுக்கு வந்தது என்று அந்த பெரியவரிடம் கேட்க..
பெரியவர் கூறினார்:

அந்த ரெண்டு பேரோட புருஷன் நான் தான்!

தீட்டுத்துணி



அத்தனை எளிதானல்ல தீட்டான பொழுதுகள்..வயித்தை முறுக்கி முறுக்கி வலிக்கும்... இடது காலொடிந்து போற மாதிரி வலி முடக்கிவிடும்..இடுப்பொடைந்து அந்த மூன்று நாட்கள் அத்தனை எளிதல்ல.......சமயத்தில் வயித்தால போகும் வாந்தியும் வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. சுமார் 14 வயதில் இருந்து ஆராம்பிச்சிடுது எங்களுக்கான இந்த பெரும் அசிரத்தை......................சுமார் 45 வயது வரை.. மாதம் 5 முதல் 7 நாட்கள் உதிரப்போக்கு.............முதல் மூன்று நாள் வலிகள்

வாழ்க்கை இம்சையான தருணங்களை மாத மாதமென சுமார் 30 ஆண்டுகள் அனுபவிக்கும் பெரும் பாக்கியம் எங்களுடையது....அந்த தீட்டு துணி நனைந்தவேளை இருக்கும் அருவெறுப்பும் அதை மாற்றும் சக்தியும் மாற்றாமல் இருக்கவும் இயலாமல் இருக்கும் கொடுமை இருக்கே......அசிரத்தையின் உச்சம்...அதை அகற்றி அடுத்தொன்று பயன்படுத்தி இந்த இடைப்பட்ட நொடிகள் தான் பெண்ணாய் பிறந்த எங்கள் நொடிகளை நாங்களே போற்றிக்கொள்வோம்.......இன்னும் கொடுமை அதை டிஸ்போஸ் பண்ணுவது.. எங்கள் உதிரம் தான் எங்களுக்கே சகிக்காது..அதை கடந்து அத்தனை எளிதல்ல நாகரீகம் கண்ட எங்கள் நிலை வீட்டில் இருக்கும் அப்பா, அண்ணன், கணவன், தம்பி, மாமா, சித்தப்பா, என இத்தியாதி ஆண்களின் பார்வைக்கு படாமல் அதை நகர்த்தி செல்வது...............

எல்லாம் எங்களுக்கும் தெரியும் என்ற போதிலும் தீட்டுத்துணியை ஆணின் எதிரில் கொண்டு செல்லும் பக்குவமும் திடமும் பொதுவாக்கும் எண்ணமும் பரவாலாகவில்லை எங்கள் பார்வையில்...

இதை அறியாது கேள்வி கேட்கும் குழந்தைகள்.. உடனே புரியவைக்கனும் என்ற கேள்வி அம்பை எய்ய வேண்டாம்...அதன் சங்கடம் கொடுமை.. என்ன சொல்வோம் 5ல் இருந்து 10க்குள் இருக்கும் குழந்தைகளுக்கு .. பாத்ரூமில் டஸ்ட்பின்னும் இட்டாலும் அதை அடுத்து செல்பவர் பார்வையில் படுமே என்ற மனச்ச்ங்கடம் உதிரப்போக்கை விட சங்கடம்....

அதிலும் வேலைக்கு செல்லும் பெண்கள் வெளியூர் பயணப்பொழுதுகளில் இதன் இடையூறு சொல்லில் மாளாது... எங்கே அணிந்து இருக்கும் உடையில் நனைந்திடுமோ என்ற் எண்ணம் மட்டுமே... எழும் உக்காரும் போது பின் பக்கம் உடையை சரி செய்வது போல் தொட்டுப்பார்த்துக்கொள்வதும்.. நாஃப்கினை சரியான நேரத்திற்கு மாற்ற இயலாமல் படும் அவதி இருக்கிறதே........எல்லாம் முடிந்த அந்த 6 வது நாள் இரண்டு கால்களின் இடுக்கும் இறுக்கத்தில் எரிந்து புண்ணாகி இருக்கும்...................போதும்ய்யா இந்த பொம்பளை ஜென்மம்..............................

பெண்ணை கடவுளாய், தாயாய், மகளாய், சினேகிதியாய்,தமக்கையாய், சித்தி பெரியம்மாவாய், வழிகாட்டியாய் இன்னுமின்னும் சிறப்பாய் நோக்கும் எல்லா பார்வைகளுக்கும்

இதே பெண்ணை.. பிகராய், பார்ட்டியாய், கூப்பிடா படிவா மச்சியாய், ஆண்டியாய், வேசியாய், புருஷபசிகொண்டவளாய், மிருகமாய் இன்னுமின்னும் கேவலமாய் பார்க்கும் அனைத்து துஷ்பிரயோகப்பார்வைக்கும் சொல்லிக்க ஆசை பட்டது இது

தீட்டுத்துணி நனைந்து நாங்களிருக்கும் தருணங்கள் கொடிது இதை கடந்து பெரிசல்ல எங்களை வார்த்தைகளாய், பிண்டங்களாய், உறுப்புகளாய் மிக கேவலமாய் கொள்ளும் பார்வைகள்..........!

- தமிழ் அரசி
Nandri- Aval vikatan