Saturday, November 30, 2013

உடை

உடை..!

“உடுக்கைக் இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் கலைவதாம் நட்பு” (குறள் 788)

இன்றைக்கு ஆங்கிலப் பெயரோடு பயன்படுத்தப்படுகின்ற உள் மற்றும் வெளி ஆடைகளுக்கானத் தமிழ்ப் பெயர்களில் தனித்துவமும் இருக்கின்றன. அவற்றைச் சங்ககாலத் தமிழர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். பெண்களின் உடை: பிரா - கச்சு, மிடி - வட்டுடை, ஜாக்கெட் - வடகம்,
(வடகத்தோடு உருத்ததூசும் - கம்ப ராமாயணம்)
பெட்டிகோட் - பாவாடை, சல்வார்கமீஸ் - தழை,
மினி - சிதர், சுவிம்மிங் டிரஸ் - புட்டகம், (நீந்துடை - புட்டகம் பொருந்துவ புனைவாதுரும் - பரிபாடல்) கவுன் - கொய்யகம், ஜட்டி - அரணம், நைட்டி - இரவணி, டூபீஸ் - ஈரணி, வெட்டிங்டிரஸ் - கூறை. ஆண்களின் உடை: பனியன் - குப்பாயம்
(துதி மயிர்த்துகில் குப்பாயம் - சீவகசிந்தாமணி) பேண்ட் - கச்சம், டை - கிழி,
பெல்ட் - வார், சட்டை - மெய்ப்பை.

ஆசிரியர் மற்றோர் இடத்தில்...
“அதே நேரத்தில் வேட்டியை ‘வேஷ்டி’ என்றும்,
சேலையை சாரி என்றும் பேசுவதும்,
எழுதுவதும் மொழியே இல்லாதவர்களின்
வேலையாகும்” எனச் சாடுகிறார்.

ஆரோக்யமும் நகங்களும்

அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்

லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்.

நகங்களில் சொத்தை விழுந்து கறுத்து காணப்பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்று பொருள்.

நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது.

விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.

விரல் நகங்கள் சற்று மஞ்சள் நிறத்தில் இருந்தால் ரத்தத்தில் நிகோடின் விஷம் கலந்திருக்கிறது என்று பொருள்.

கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு.

கைவிரல் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், உடல் நலம் குன்றியிருப்பதற்கு அடையாளம்

கைவிரல் நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால், வாயுத் தொல்லை இருப்பதற்கான அடையாளம்.

பெர்ரீஸ்

பெர்ரீஸ்

விட்டமின்கள் நிறைந்திருக்கும் பெர்ரீஸ் பழங்கள் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ளப்படும்போது நினைவாற்றல் மிக அதிகமாக அதிகரிக்கும்.

2010ம் ஆண்டில் நினைவாற்றல் குறைபாடுள்ள ஒத்த வயதினரை இரு பிரிவாகப்பிரித்து ஒரு பிரிவுக்கு மட்டும் 12 வாரங்கள் பெர்ரி பழ ஜீஸ் கொடுத்தும் ஒரு பிரிவுக்கு பெர்ரி சேர்க்காமலும் சோதிக்கப்பட்ட ஆய்வின் முடிவில், பெர்ரி உட்கொண்ட பிரிவினருக்கு நினைவாற்றல் மிக அற்புதமான அளவில் முன்னேறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இது டிப்ரஷனுக்கான அறிகுறிகளையும் வெகுவாக குறைத்திருக்கிறது.

2009ம் ஆண்டு நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவில் ஆண்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்திருக்கும் புளு பெர்ரி மற்றும் ஸ்ட்ரா பெர்ரி பழங்கள் வயதாகும் தோற்றத்துடன் சம்பந்தப்பட்ட செல்களில் ஏற்படும் ஒருவித ஸ்ட்ரெஸ்சை குறைப்பதிலும், மூளையின் சிக்னல் திறனை அதிகரிப்பதிலும் அரும்பங்கு ஆற்றுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

நீர் மருந்து

தண்ணீர்... – ஏழு அற்புதங்கள்!

‘நீரின்றி அமையாது உலகு’ என்பது நாமறிந்த சொல்தான்... சிலர் அதிகம் தண்ணீர் குடித்தால் பல்வேறு நோய்களை உண்டு பண்ணும் என்றும், சிலர் அதிகம் தண்ணீர் குடித்தால் உடல் நலத்திற்கு நல்லது என்றும் விதவிதமாக கருத்து கூறுவர்...

உண்மை என்ன?...

தண்ணீர் நமக்களிக்கும் நன்மைகளை இந்த ‘’7 வொண்டர்ஸ் ஆஃப் வாட்டர்’’ மூலம் தெரிந்து கொள்ளலாம்...

1) தண்ணீர் உங்கள் உடலை சிலிம்மாக வைத்துக்கொள்ள உதவும்...

உடல் எடையைக்குறைக்க விரும்புகிறீர்களா?... அதில் தண்ணீரின் பங்கு அலாதியானது.

கலோரியுடன் கூடிய பல்வேறு குளிர்பானங்கள், ஜூஸ்கள் ஆகியவற்றிற்கு பதில் தண்ணீரை குடித்து உங்கள் தாகத்தை தணித்துக்கொள்ளப் பழகுங்கள். அதே போல உணவருந்தும் முன்னர் ஒரு டம்ளர் தண்ணீரை பருகுவது உங்களுக்கு விருப்பமான உணவாக இருந்தாலும்கூட உங்களை அளவுக்கு அதிகமாக உண்ண விடாமல் வயிறு நிரம்பியதொரு உணர்வைக்கொடுத்து உங்கள் டயட்டுக்கு பெரிதும் உதவும்.

தண்ணீர் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு பெரிதும் உதவக்கூடியது. உதாரணத்திற்கு நீங்கள் கொஞ்சம் குளிர்ந்த தண்ணீரை குடிக்கும்போது உங்கள் உடல் அந்த தண்ணீரை சமவெப்பநிலைக்கு கொண்டுவர மேற்கொள்ளும் உழைப்பில் ஒரு சில கலோரிகள் எரிக்கப்படுமாம்...

2) தண்ணீர் உங்கள் எனெர்ஜியை அதிகப்படுத்தும்...

உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையும்போது(டிஹைட்ரேஷன்) பெரிதளவு சோர்வு உண்டாகும்.

தண்ணீர் உங்கள் உடலில் இரத்தம் எடுத்துச்செல்லும் ஆக்ஸிசனையும், செல்களுக்குத்தேவையான அத்தியாவசிய சத்துக்களையும் கொடுத்து உதவுகிறது.

நீங்கள் சரியான அளவு தண்ணீர் அருந்துவதால் உங்களது இதயம் இரத்தத்தை உடல் முழுவதும் பம்ப் செய்வதற்கு வழக்கத்தைவிட அதிக அளவு வேலை செய்ய வேண்டியதிருக்காது.

3) தண்ணீர் உங்கள் உடல் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும்...

உங்கள் மூளையின் 70 முதல் 80% திசுக்கள் தண்ணீர் கொண்டதுதான்... உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையும்போது உடல் மற்றும் மனது இரண்டுமே அழுத்தத்திற்கு ஆளாகும்.

நீங்கள் தண்ணீர் தாகத்துடன் இருக்கிறீர்கள் என்றால் ஏற்கனவே உங்கள் உடல் டிஹைட்ரேஷன் ஆகத்தொடங்கிவிட்டது என்றுதான் அர்த்தம். அதனால் எப்போதுமே உங்கள் மேஜையில் ஒரு டம்ளர் தண்ணீரை வைத்துக்கொள்வதோ... இல்லை... உங்களுடன் தண்ணீரை சிப் பண்ணிக்குடிக்க ஒரு ஸ்போர்ட்ஸ் பாட்டிலை வைத்துக்கொள்வதோ மிகச்சிறந்தது.

தண்ணீர் குடிப்பது தசை சுருங்குதலை தடுப்பதோடு, உடலின் அனைத்து இணைப்புகளிலும் சிறந்ததொரு லூப்ரிகண்ட்ஸாக செயல்படவும் உதவும்.

4) தண்ணீர் உங்களது பொலிவைக் கூட்டும்...

தண்ணீர் இயற்கை கொடுத்த ஒரு அழகு கிரீம் என்று சொன்னால் மிகையல்ல.

சரியான அளவில் தண்ணீர் அருந்துவது தோலின் செல்களுக்கு நல்ல பலன்களை அளித்து உங்கள் முகத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவும்.

தண்ணீர் உங்கள் உடலிலிருந்து அசுத்தங்களை அகற்றுவதோடு, இரத்த ஓட்டத்தையும், சுத்திகரிப்பையும் அதிகரித்து உங்களுக்கு முகப்பொலிவை வழங்குகிறது.

5) தண்ணீர் உங்கள் உடலின் சரியான செரிமாணத்திற்கு உதவும்...

சரியான செரிமாணத்திற்கு நார்ச்சத்துக்களுடன், தண்ணீரும் மிக அவசியமானதாகும்.

தண்ணீர் உணவின் தேவையற்ற பகுதிகளை கரைத்து மெதுவாக செரிமாணத்தின் மூலம் உடலை விட்டு அகற்றுகிறது.

உங்கள் உடல் டிஹைட்ரேட் ஆகும்போது உடலின் எல்லா பாகத்திலுமிருந்து நீர்ச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டு காலியாகிவிடுவதால் உடலில் உள்ள தேவையற்றவற்றை நீக்குவது கடினமாகிப்போகும்.

6) தண்ணீர் உங்கள் கிட்னியில் கற்கள் உண்டாவதை தடுக்கும்...

மிகுந்த வலியையும், வேதனையையும் கொடுக்கும் கிட்னி கற்கள் இன்று பரவலாக அதிகரித்து வருவதன் முக்கிய காரணம்... பெரியவர்களும் குழந்தைகளும் போதிய அளவு தண்ணீர் குடிக்காமலிருப்பதுதான்...

சரியான அளவில் அருந்தும் தண்ணீர் உங்களது யூரினில் உள்ள சால்ட் மற்றும் மினரல்ஸை கரைத்து வெளியேற்றிவிடுவதால் அவைகளால் உருவாகும் சாலிட் கிரிஸ்ட்டல்ஸ் எனப்படும் கிட்னி கற்கள் உருவாகாமல் தடுக்க முடியும்.

நன்றாக டைல்யூட் செய்யப்பட்ட யூரினால் கிட்னி கற்கள் உண்டாகும் வாய்ப்பு மிகக்குறைவு என்பதால் முடிந்த அளவு தண்ணீரை பருகுவது நலம்.

7) நீங்கள் தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா?...

பொதுவாக நியூட்ரிசியன்களால் நமக்கு பரிந்துரைக்கப்படுவது 8X8 என்ற ரூல்ஸ்தான்...

தினமும் 8 அவுன்ஸ் கிளாஸ் தண்ணீர் குடிப்பது கட்டாயமாகும்.
நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போதும், அதிக அளவு வியர்வையில் நனையும் போதும் வழக்கத்தை விடவும் அதிகமாக தண்ணீர் அருந்துவது மிக அவசியம்.

ஆகவே மக்களே... எண்ணற்ற நோய்களும், உடல் பருமன் பிரச்சினைகளும் ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் இந்தக்காலத்தில் இயற்கையே கொடுத்திருக்கும் வரப்பிரசாதமான தண்ணீரை தவறாமல், சரியான அளவில் தினந்தோறும் பருகி நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சந்தோஷமாய் நீங்களும் வாழ்ந்து, உங்கள் வருங்கால சந்ததியினரையும் அவ்வாறே வாழப்பழக்குங்கள்...

Friday, November 15, 2013

வாழ்வின் உயர்வு!

வாழ்வின் உயர்வு!

தந்தை தனது வயலை இரு மகனிடம் ஒப்படைத்தார்.., அண்ணாவுக்கு திருமணமாகி ஐந்து குழந்தை இருந்தது. தம்பி இறுதிவரை திருமணம் செய்யவில்லை. தந்தையின் உத்தரவு படி விளைவை இருவரும் சமமாக பிரித்தனர். அண்ணா சிந்தித்தான்.., "எனக்கு முதுமைவந்தால் பிள்ளைகள் இருக்கிறார்கள் கவனிப்பதற்கு.. தம்பிக்கு யாரும் இல்லை.. அவனுக்கு தான் சேமிப்பு தேவை..!" ரகசியமாக ஒவ்வொருமாதமும் ஒரு மூட்டை தானியத்தை கொண்டு போய் தம்பியின் களஞ்சியத
்தில் வைக்க ஆரம்பித்தான்.

தம்பி மாறி சிந்தித்தான்.., "நானோ ஒருவன்.. அண்ணா குடும்பத்துக் அல்லவா அதிக பங்கு தேவை..!" அவனும் தன் பங்கில் இருந்து ஒரு மூட்டையை அண்ணாவின் களஞ்சியத்தி வைக்க ஆரம்பித்தான். இது இப்படியே பல வருடங்கள் நீடித்தது.

ஒருநாள் அண்ணா, தம்பி இருவரும் தானிய மூட்டைகளுடன் சந்தித்தார்கள். இருவரும் தர்மசங்கடமாக உணர்ந்து, பின்பு ஒரு வார்த்தை கூட பேசாது வழக்கபடியே அடுத்தவர் களஞ்சியங்களிலேயே இறக்கி விட்டு தத்தம் வீடு திரும்பினார்கள்.. பிற்காலத்தில் அந்த ஊரில் கோயில் எழுப்பத் தகுந்த இடத்தை தேடிய போது, அந்தச் சகோதரர்கள் சந்தித்த இடமே புனிதமாக அமைந்தது.

இது போல் அன்பில் தடுமாறகிற உயர்வை உணராமல் தொலைத்தவர் பலர். வாழ்வின் உயர்வு இதுபோல் அன்பில் இருக்கிறது

திபேத்தியர்களின் கிராமியகதை.

திபேத்தியர்களின் கிராமியகதை.

ஒரு ஊரில் அண்ணனிடம் 99 பசுக்கள் இருந்தன. ஆனால் தம்பியிடம் ஒரே ஒரு பசுதான் இருந்தது. அந்தத் தம்பிக்கு அந்த ஒரு பசுவே போதுமானதாக இருந்தது. அதில் பால் கறந்து வீட்டில் எல்லோருக்கும் கொடுத்தான். மிஞ்சியதை வியாபாரம் செய்தான். சந்தோஷமாக வாழ்ந்தான். ஆனால் 99 பசுக்களை வைத்திருந்த அவனுடைய அண்ணன் சந்தோஷமாக இல்லை. அவன் எப்படியாவது இந்தப் பசுக்களை நூறாக மாற்றிவிடவேண்டும் என்பதற்காக தம்பியைப் பார்க்க வந்தான்.

"தம்பி, உன்கிட்ட இருக்கிறது ஒரே ஒரு பசுதான். திடீர்ன்னு அது தொலைந்து போனால் நீ என்ன செய்வாய்..? நீ ஒரு பசுவை வைத்திருப்பதும், பசுவே இல்லாம இருக்கிறதும் கிட்டத்தட்ட ஒண்ணுதான்! என்கிட்ட இன்னும் ஒரே ஒரு பசு இருந்தாப் போதும், நூறு பசுக்களுக்குச் சொந்தக்காரன்னு ஊர்ல எல்லோரும் என்மேல பெரிய மரியாதை செலுத்துவாங்க. இல்லையா..?"

"ஆமாம்ண்ணா.. வேணும் என்றால், நீ என்னோட பசுவை எடுத்துக்கொள்..!" என்றான் தம்பி.

இது திபேத்தியர்களின் கிராமியகதை. நம்மிடம் நிறைய இருந்தால், மனது இன்னும் நிறைய வேண்டும் என்று விரும்பும், குறைவாக இருந்தால், அதையும் விட்டுக் கொடுத்து விடுவதற்குத் தயாராக இருக்கும்.! அந்த மனதுதான் உயர்ந்தது என்பதற்கு அவர்கள் கூறும் கதை.

Sunday, November 10, 2013

நடைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!

நடைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!

நோய் வந்தபின் நடைப்பயிற்சியா?
நோய் முற்றியபின் நடைப்பயிற்சியா?
உடல் குண்டானப் பின் நடையா?
வரும் முன் காத்தலுக்கான நடையா?
மருத்துவரின் கட்டாயத்திற்காக நடையா?
மனைவியின் வற்புறுத்தலுக்கான நடையா?
ஆர்வத்தினால் ஏற்படும் நடைப்பயிற்சியா?
சுறுசுறுப்பிற்கான நடையா?
தொப்பை குறைப்பதற்கான நடையா?
போட்டிக்கான நடையா?
உணவு ஜீரணத்திற்கான நடையா?
விரும்பித் தொடரும் நடையா?
திணறும் குழந்தை நடையா?
பொழுதுபோக்கிற்கான நடையா?
ஆரோக்கியம் தொடரும் நடையா?

இவைகளைப் பொறுத்து நடையின் பலன்கள், தாக்கங்கள் வேறுபடும். எனிலும் பொதுவாக எந்த நடையாக இருந்தாலும் நல்ல நலம் அருமையான பலன்கள் கிட்டுகின்றன. அது உறுதி, செய்நன்றி, பலன் எதிர்பாரா நன்றி, என நன்றிகள் பலவகை இருப்பதுபோல் நடைகளும் பலவகையாக உள்ளன.

வாழ்வும் நடையும்:
1) பயணநடை
2) தலயாத்திரை நடை
3) கோயில், சுற்று மலை கிரிவல நடை
4) கோரிக்கை, அரசியல் நடைபயணம் &
5) விரதநடை
6) மலைப் பிரதேச நடை
7) வசதிகள் இல்லா நடை

தீமி நடை
9) படிகட்டு நடை
10) திருவிழா நடை
11) பஜனைப் பாடல் நடை
12) கல்யாண ஊர்வல நடை
13) சுற்றுல நடை
14) அடிவலம், அடிபிரதட்சன நடை

தொழிலும் நடையும்:
1) ஆடு, மாடு, மேய்த்தல் நடை
2) வயல்வெளி நடை
3) அலுவலகம் செல்லல் நடை
4) விற்பனை தொழல் புரிதலுக்கான நடை
5) வேட்டையாடுதல் நடை
6) காட்டு வழி நடை
7) விளையாட்டு அன்பர்கள் நடை

நடையும் இடமும்
1) புல்தரை நடை
2) மணல் நடை
3) ரோட்டு நடை
4) காட்டு வழி நடை
5) மாடி வீட்டு நடை
6) கடல் நீரில் நடை
7) ஆற்று நீரில் நடை
மலைமேல் நடை
9) நெருப்பில் நடை
10) கடற்கரை நடை
11) மாடிப்படி நடை
12) கூழாங்கல் நடை
13) பார்க் நடை
14) விளையாட்டு மைதான நடை

இயல்பான நடையும் அதன் தன்மையும்:

சிங்கநடை, சிருங்கார நடை, துள்ளல் நடை, உவகை நடை, அழகு நடை, ஆர்ப்பாட்ட நடை, அலப்பல் நடை, அமைதி நடை, ஆணவ நடை, அகங்கார நடை, சோக நடை, சுகமான நடை, இயல்பான நடை, இணக்கமான நடை, காக்கா நடை, நொண்டி நடை, தூக்க நடை, போலீஸ் நடை, வீரர்கள் நடை, ராஜ நடை, குழந்தை நடை, கோபநடை, நாடி தளர்ந்த நடை, கூனல் நடை, நிமிர்ந்த நடை, கம்பீர நடை, சீரான நடை, தாளநடை, அன்ன நடை, மயில் நடை, தியான நடை, எட்டு நடை, நாலு நடை.

நடையும் நலமும்

நமது வாழ்வில் இயல்பாக இருக்க வேண்டும். விரும்பி நடந்தால் நாளெல்லாம் வாழ்வில் நலத்திற்குப் பஞ்சமில்லை & நாடி நடந்தால் நாளெல்லாம் சுகமே, நலமே கிட்டும். அற்புத தூக்கம் உடலைத் தாலாட்டும்.
நடை நல்ல நலக் கொடையாகும்
நடை நல்ல மருந்தாகும்
நடை நல்ல உடற்பயிற்சியாகும்
நடை நல்ல ஆரோக்கிய கவசமாகும்.

பெட்டிச் செய்தி:

நடைப்பயிற்சி மேற்கொள்ளும் சமயம் பசியின்மை நோய் விரைந்து விலகி பசி மேம்படும். சிலருக்கு அகோரப் பசி ஏற்படும். அப்போது சரியான, சிறப்பான, ஆல்கலைன் உணவுகளைச் சாப்பிட்டால் மறுபடி எடை கூடாமல் சரிசெய்யலாம். இது பலரின் அனுபவ உண்மை. சிறப்பான ஆல்கலைன் உணவுகள் கனிகளும் கொட்டைப் பருப்புகளும் & அவைகள் சிறப்பான இயற்கை உணவுகளாகும். உடனடி சக்தியும், தெம்பும் இயற்கை உணவில் இலகுவாக, இயல்பாக, இணக்கமாகக் கிட்டுகின்றன.

முதுகுவலி வராமல் தடுக்க…!

முதுகுவலி வராமல் தடுக்க…!

1. எப்போதும் சுறுசுறுப்போடு இருப்பது, பொதுவான உடற்பயிற்சிகள் செய்வது. (உதாரணமாக) நடப்பது, நீச்சல் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது.

2. தாழ்ந்த நாற்காலியில் அதிக நேரம் அமர வேண்டாம்.

3. உறங்கும் போது கடினமான மெத்தையை உபயோகிக்கவும் (அல்லது) தரையில் உறங்கவும்.

4. நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது இருக்கையை உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளவும், அதிக தூரம் பயணிக்கும் போது பிரேக் மெதுவாக அடிக்கவும்.

5. கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள் தங்கள் இருக்கையை சரிசெய்து, தனது முழு முதுகும் இருக்கையில் (நிமிர்ந்தவாறு) இருக்கும்படி செய்யவும்.

6. அதிக எடையை தூக்கும் போது உங்கள் மார்போடு அணைத்தபடி தூக்கவும்.

7. அதிக நேரம் முதுகு திரும்பியவாறு வேலை செய்ய வேண்டாம்.

8. அதிக நேரம் நின்று கொண்டே பயணிக்க வேண்டாம்.

9. முதுகுவலி எடுத்தால், நீண்ட நேரம் அமருவதை தவிர்க்கவும், 30 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து நில பொதுவான பயிற்சிகள் செய்யவும்.

கீழ்க்கண்ட ஏதேனும் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக (பிசியோதெரபிஸ்டை) அணுகவும்.

1. தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் முதுகு வலி இருந்தால்.

2. வலி கால்களுக்கு பரவுதல், கால்களுக்கு பரவுதல், கால்களில் உணர்ச்சியின்மை (அல்லது) எரிச்சல்.

3. குனிந்தால் பளிச்சென்று வலி பரவுதல்.

4. நீண்ட நேரம் நின்றால், அமர்ந்தால் முதுகுவலி வருவது.

பெண்களின் “அந்த” நாட்களும் இறைவழிபாடும்.

பெண்களின் “அந்த” நாட்களும் இறைவழிபாடும்.

பெண்களின் மாதாந்த இயற்கையைக் காரணம் காட்டி அவர்களை வீட்டில் அடைத்துவைத்ததும், இறைவழிபாட்டை மறுத்ததும் பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்க வாதம் என்று இன்றெல்லாம் பெண்ணியவாதிகள் கருத்துப் பேசுகின்றனர். ஆனால், இந்த விலக்கிவைத்தலுக்குக் காரணம் இல்லாமலில்லை!

மாத இயற்கை காலத்தில் பெண்களின் உடல் சற்று வலிதாங்கவேண்டியிருப்பது உண்மைதான். இன்றைய விசேட துணி வசதிகள் இல்லாத பழங்காலத்தில், மாதவிலக்குக்குள்ளான பெண்கள் நடமாடித் திரிவது எத்தனை கடினம் என்பதை குறித்த பெண்களாலேயே ஊகித்துணர முடியும். எனவேதான் பெண்ணை அந்நாட்களில் ஒற்றையாடை அணிவித்து, வீட்டின் ஓரம் விலகியமர்ந்திருக்கச் செய்தனர். அதுதான் மாத + விலக்கு! அவளது உடல்வேதனையைக் கருதி அந்நாட்களில் வீட்டுவேலைகள் செய்வதிலிருந்தும் இறைவழிபாட்டில் ஈடுபடுவதிலிருந்தும் அவளுக்கு விலக்களிக்கப்பட்டது. நீராடித் தூய்மையான பின்னரே அவள் சாதாரண வாழ்வு வாழ அனுமதிக்கப்பட்டாள்.

குழந்தைகளைப் பெறுவதற்காக இயற்கை மாதர்க்கே கொடுத்த வரத்தின் கடுமையான மறுபக்கம் இந்த உபாதை நாட்கள்! என்றாலும், சமயத்தின் பெயரால் அதனை தீட்டென்று ஒதுக்கிவைத்ததும், அந்தக் குருதியை இந்திரனின் பிரம்மகத்தி தோசம் என்று “கப்சா” விட்டதையும் ஏற்றுக்கொள்ள முடியாதுதான்.

இன்றைக்கு “அந்த” நாட்களிலும் சாதாரண நாட்கள் போல சுதந்திரமாக இயங்குமளவுக்கு பெண்களுக்கு வசதிவாய்ப்புக்கள் உள்ளது. எனினும் அந்நாட்களில் இறைவழிபாடு கூடாதென்ற விதி மட்டும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

சகோதரிகளே! நீங்கள் ஒற்றையாடை அணிந்து இக்கட்டாக அந்த நாட்களைக் கழிக்கவேண்டிய பழங்காலத்தில் வாழவில்லை. மன ஒருமைப்பாடு சாத்தியமாகவுள்ளபோது, தாராளமாக அந்த நாட்களிலும் இறைவழிபாட்டில் ஈடுபடலாம்.

இறைவழிபாடு என்பதே மனதுக்கும் உடலுக்கும் வலுவூட்டத் தானே! மனம் ஒத்துக்கொள்ளாவிட்டால் மட்டும் கோயிலுக்கு செல்லாதீர்கள். மற்றும்படி, இல்லங்களில் பூசனையாற்றுவதிலோ இறைநாமங்களைச் செபிப்பதிலோ வழக்கத்தை மாற்றவேண்டியதில்லை!

உபரித் தகவல்: கேரளாவின் செங்கனூர் பகவதியம்மன், சாதாரண மானிடப்பெண்டிர் போல இன்றைக்கும் மாத இயற்கைக்குள்ளாகிறாள். “திருப்பூத்து” என்று பயபக்தியுடன் அழைக்கப்படும் இவ்வற்புதம் இன்றும் நிகழ்ந்துவருகிறது.

ரஷ்யாக்கும் இந்தியாவுக்கும் புராதன தொடர்பு

ரஷ்யாவில், புராதன விஷ்ணு சிலையை தொல்லியல்துறை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். ரஷ்ய நாட்டில், வோல்கா பகுதியில் உள்ள, மாய்னா என்ற கிராமத்தில், கடந்த, ஏழு ஆண்டுகளாக, தொல்லியல்துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆராய்ச்சி குறித்து ஆய்வுக் குழுவைச் சேர்ந்த கோஜ்வின்கா கூறியதாவது: மாய்னா கிராமத்தில், 1,700 ஆண்டுகளுக்கு முன்பு 8,000 பேர் வசித்துள்ளனர். இப்பகுதியில், ஏழு மற்றும் 10ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட மகாவிஷ்ணுவின் சிலை கிடைத்துள்ளது.

இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியில் புராதன நாணயங்கள், பதக்கங்கள் மோதிரங்கள் மற்றும் ஆயுதங்கள் கிடைத்துள்ளன.இவ்வாறு கோஜ்வின்கா கூறியுள்ளார்.இந்த புராதன கிராமத்தின் தோற்றம் மற்றும் அழிவு குறித்த சர்வதேச கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தற்போது கிடைத்த மகாவிஷ்ணு சிலை காட்சிக்கு வைக்கப்பட்டது.

ரிக் வேதத்தில் இப்பகுதி புனிதத் தலமாகவும் 722 பறக்கும் விமானங்கள் இருந்ததாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிலை கிடைத்திருப்பதன் மூலம் ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கு இடையில் பண்டைக் காலத்திலேயே தொடர்பு இருந்தது உறுதியாகி உள்ளது.

பெருமாள் கோவில்களில், பூஜை, அர்ச்சனைகள் எவ்வாறு செய்யப்படுகிறதோ அதேபோன்ற, பூஜை, அர்ச்சனைகள், ரஷ்ய சர்ச்சுகளில் செய்யப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி பெயரில், அவர்களும் ஒரு விழாவைக் கொண்டாடுகின்றனர்.

அனைவரும் அவசியம் அறிய வேண்டியவை

அனைவரும் அறிய வேண்டியவை
*********************************

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.
பெண்களுக்காக…

10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

காதல் :)

ஒரு பையன் அவன் காதலிக்கிட்ட

கேக்குறான்...

நான் அழகா இருக்கனா...?

Girl :- இல்லை

Boy :- நீ என் கூட வாழ

விரும்புறியா..?

Girl :- இல்லை

Boy :- நான்

உன்னை விட்டு போயிற்றா.. நீ

அழுவியா...?

Girl :- இல்லை

The Boy Was So Sad....웃!

அந்த பொண்ணு அவன் கன்னத்தில

முத்தமிட்டு.. சொன்னா...

நீ அழகா இல்லை றொம்ப

அழகா இருக்க...

எனக்கு உன் கூட வாழ விருப்பம்

இல்லை,உனக்காக வாழ

விரும்புறேன்..

நீ என்னை விட்டு போனால்... நான்

அழ மாட்டேன்டா..!

என்னை சுற்றி எல்லோரும்

அழுவாங்கடா..!

தாயன்பு

தாய் வயலில் வேலை செய்து கொண்டிருந்தாள்..

அவள் குழந்தை பக்கத்தில் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தது.வேலை மும்மரத்தில் தாய் சிறிது நேரம் குழந்தையைக் கவனிக்க வில்லை.

திடீரென ஞாபகம் வந்து பார்த்தபோது குழந்தை கைபிடியில்லாத ஒரு கிணற்றின் விளிம்பருகே நின்று கொண்டிருந்ததைக் கவனித்தாள்.

அடுத்து ஒரு அடி எடுத்து வைத்தாலும் குழந்தை கிணற்றுக்குள் விழுந்துவிடும், கூட இருந்தவர்கள் பதைபதைத்தார்கள்.

தாய் சிறிது கூட யோசிக்காமல் கொஞ்ச தூரம் மெதுவாக நடந்துசென்று,குழந்தையைப் பார்த்து,

''பாப்பா,அம்மா வீட்டுக்குக் கிளம்பி விட்டேன்.நீ வருகிறாயா,இல்லையா?'' என்று சப்தம் போட்டு சொன்னாள்.

அடுத்த நிமிடம் குழந்தை திரும்பிதாயைப் பார்த்து ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டது.

தாயன்பு தானே அந்த இக்கட்டான நேரத்தில் சமயோசிதமாக சிந்திக்க வைத்தது.

Tuesday, November 5, 2013

ஓமெனும் பிரணவ மந்திரம்


அடிப்படைக் குரல் ஒலிகள் மண்ணிலோ ஏதாவது ஒரு திரவத்திலோ அதிர்வடையச்செய்யும்போது, அவை சில அமைப்புக்களை உண்டாக்கும்.இந்த அமைப்பு இயல் அலையியல் (Cymatics) எனப்படும்.

இதனைக் கண்டறிந்து உலகிற்கு உணர்த்தியவர் சுவிஸ்நாட்டின் அறிஞர் டாக்டர் ஹான்ஸ்ஜென்னி(1904 முதல் 1972 வரை).ஒலியின் ஒவ்வொரு அதிர்வும் ஒரு தனித்த அமைப்புடையது.இயற்கை மூலம் இவை திரும்பத் திரும்ப நிகழ்கின்றன.

படைப்பின் அடிப்படை ஒலி ஓம் ஆகும்.

இப்பிரபஞ்சத்தில் எல்லாப் பொருளும் சக்தி அதிர்வால் ஆனவை.ஒவ்வொரு பொருளும் தனக்கென்று தனித்த அதிர்வெண்ணில் அதிர்கிறது.அதிரும் சக்தியை ஒளியாகக் காணலாம்.

இது மனிதர்களையும் உள்ளடக்கியது.நாம் எல்லோரும் அதிரும் ஒளி சக்தியே!!!

பிரபஞ்சத்திலும் பூமியிலும் சில புள்ளிகளில் குவிகிறது.இப்புள்ளிகளை அதிர்புள்ளிகள்(Vortex)என்பர்.

ஹான்ஸ்ஜென்னி ஓம்கார ஒலியை மணலில் அதிரச்செய்தார்.அவ்வாறு செய்த போது ஸ்ரீசக்கரவடிவத்தில் படல் கிடைத்தது.எனவே,ஓம் என்ற பிரணவ ஒலியின் வரிவடிவம்(ஸ்தூல வடிவம்)ஸ்ரீசக்கரம்.

ஆச்சரியமாக இருக்கிறதா?நமது ஆன்மீகம் எவ்வளவு அறிவியல் தன்மைகொண்டது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்।
நன்றி:ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம்,பக்கம் १३, பிப்ரவரி 2008

ஓம் என்னும் பிரணவம்
எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே.அந்த ஒலியே பிரணவம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ''ஓ'' என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ''ம்'' என்ற ஒலி தோன்றுகிறது.
இந்த ''ஓம்-ஓம்'' என்ற ஒலியையே பிரணவம் என்று கூறுவர். உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரணவ ஒலியே நிலவி இருந்தது என்றும் , பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.

ஓம் என்பது பிரணவ மந்திரமாகும்.

இது அ + உ+ ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ஓம். மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது.மனித வடிவமும் அருள் வடிவம்தான்.

ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும் "உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்யாவது போல் உடலும் உயிரும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு. அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது.

மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். [உள் மூச்சு வெளி மூச்சு ]

" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு.
" ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்.

அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும்.

அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.

தனைச் சிலர் இப்படியும் கூறுவார்கள்: அ என்பது முதல்வனான சிவனையும் உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.

இச் சிவசக்தி வடிவமே, சொரூபமேவரி வடிவில் "ஓ" என பிள்ளையார் சுழியாகவும்,"உ" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ,ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம், பிரணவம் என்று ஆன்றோர்களும்,சான்றோர்களும் சொல்கிறார்கள்.

இதனை திருமூலர், திருமந்திரத்தில் :

" ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே "

முதல் வரிக்கு ஓம் என்பதை உச்சரிக்கும் பொழுது ஒரே சொல்லாகவும்,ரண்டாம் வரிக்கு அன்னையின் கருவில் பிண்டம் தரிக்கும் பொழுதும்அது தாயின் வயிற்றிற்குள் காணும் காட்சி ஓம் என்றே தோன்றும் ,மூன்றாம் வரிக்கு ஒரே உச்சரிப்பாயினும், மூன்றெழுத்தையும் அதன்விளக்கத்தையும் , பேதங்கள் பலவாறாகவும் , நான்காவது வரிக்கு தைச் சதா உச்சரித்து தியானிப்பதால் முக்தி - உயர்ந்த சித்தியும் கிட்டும் என்பதைப் பாடல் நமக்கு உணர்த்துகிறது.

முதல் எழுத்து :
^^^^^^^^^^^^^
"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பாசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "
-- என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.

சட்டை முனியும் தனது சூத்திரத்தில் :

" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு
ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "
- --என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிவன், சக்தி , சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்கும் முதல் எழுத்தாகவும் இதுவே "அ" உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக் குறிக்குங்கால் , தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , சமஸ்கிருதம் முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து.

" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு "
-என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும் ,

அகஸ்த்திய பெருமான் தனது மெய்ஞான சூத்திரத்தில் ,
" அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி ,
- ஐம்பத்தோ ரெழுத்துக்கு ஆதியாகி "

"அகாமுதல் அவ்வைமுத்தும் ஆதியாகும்
அறிந்தோர்க்கு திலேதான் வெளியதாகும் "
--என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.

உருவமும்- உடலும்.
^^^^^^^^^^^^^^^^^^
உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தபடி இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது. ஆண்டவன் இவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார் என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது சூத்திரம் மூலம் விளங்கும்.

"கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"
- மச்சைமுனி தீட்சை ஞானம்

"உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி
விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை "
- அகஸ்தியர் முதுமொழி ஞானம்.

மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு , அல்லது மேல் வாயைத் தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போது உண்டாகும்எல்லா ஒலியையும் விட மிகவும் யற்கையானது.

இது பற்றி யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி 800 - ல்

"அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்
அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்
எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்
ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம்
முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம்
முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி "

என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் துவே முதல்காரணமென நன்கு தெளிந்துணரலாம்.

ஓங்காரம், பிரவணம். து எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக இருந்துஅகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கி நிற்கும்.

தை விளக்கும்படி திருமூலர்,

"ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும் நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும்" என்று கூறியுள்ளார்.ஓங்காரத்தி தத்துவம் , அ , உ , ம் எனமித்து ஒலி எழுப்புவது.அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின்தோன்றிக் காத்தல் தொழிலையும் , மகாரவொலி முடிவாதலின் அழித்தற் தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கே ணைத்து அடக்கி நிற்கும்.

"ஓம்" எனும் தாரக மந்திரத்தைத் தனிமையாக ருந்து ஏகாந்த தியானம்செய்தால் தன் பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம்அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும்,உலகையும் மறந்து நிற்க , ஆசாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும்.குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெய்ஞான விசாரணை விளைந்து,அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் ல்லாத ஒன்றாகிவிடும்.ந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும்

"ஓம்" என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால்ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும். தன் மூலம் ஒளியைத் தரிசித்து மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில் ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும் தன்மை நீங்களும் காணலாம்.
You see, there is no gain without pain.ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம்.ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்படியொரு சாதனையைப் பழக்கப் படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது மனதை, கவனத்தைச் செலுத்தலாம்.வேகமாக
சிந்திக்கலாம். சிந்தனையின் பல படிகளைத் தாண்டி முடிபுகளை விரைவாக அடையலாம்.
Lateral Thinking போன்றவை எளிதானவைதானே!

பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். இதைஉண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து - சாவில்லாது என்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம் கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.அதிகாலை எழுந்ததும் , இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாதுபத்து நிமிட மணித்துளிகள் ' ஓம் ' என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்கவேண்டும்.உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாக காற்றை சுவாசித்து டப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிடவேண்டும்.

இப்படி சூரிய பகுதியில் உஷ்ணமாக உள்ள காற்றை சந்திரப்பகுதியில் குளிர்ச்சிப்படுத்தி வெளியேற்றும் பொழுது'ஓம்' என்ற மந்திரத்தை மனதால்நினைந்தவாறு தொடர்ந்து செய்து வரவேண்டும்.இங்ஙனம் வெளிச்செல்லும் பிராணன் குறைந்து குறைந்து இறுதியில் உள்ளேயே சுழலத் தொடங்கும்.உள் சுழற்சியால் மூலாதாரத்தில் பாம்பு வடிவில் உறங்கிக் கொண்டுடிருப்பதாக சொல்லப்படும் குண்டலிஅல்லது குண்டலினி என்னும் சக்தி எழுப்பும்.குண்டலியும் அடியுண்ட நாகம் போல் ஓசையுடன் எழும். இவ்வாறு எழும்பும் குண்டலினி ஆறு ஆதரங்களில் பொருந்தி சகஸ்ராரத்தில் சென்று அமுதமாக மாறிக் கீழ்வரும்.
[ சித்தர்கள் 'விந்து விட்டவன் நெந்து கெடுவான்]என்பார்கள். காரணம் ந்த விந்துதான் பிரணாயமத்தின் மூலம் குண்டலி வழி சகஸ்ராரத்தில் அடைகிறது. மேல் ஏறினால் பேரின்பம்.கீழ் இறங்கினால் சிற்றின்பம்.

யோகியர் நாவை மடித்து தனை உண்ணுவார். இ ந்த ஒரு சொட்டு அமுதம் சுவைதால் பசி,தாகம்,தூக்கம் ல்லாது பன்னிரண்டு ஆண்டுகள் தவமிருக்கலாம். அதுவே சிவநீர் என்பார்கள். தனை விழுங்கினால் நாமும் காயசித்தி பலனை அடையலாம்.

தனை திருமூலர் :
"ஏற்றி றக்கி ருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாள்ர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே " - என்கிறார்.

இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை.அவ்வாறு இரண்டாகப் பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை.அவ்வாறு அறிந்தவர்கள் எமனைஎதிர்த்து உதைக்கும் ஆற்றல் அறிந்தவர்கள்.
வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் 'தாம் பெற்ற ன்பம் வ்வையகம் பெறுக' என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.

காயசித்தியின் பெருமையினை 'காகபுசண்டர்' பாடலைக் காண்போம் :

பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்
பாலகன் போலொரு வயது தானுமாச்சு
நேரப்பா ருபத்தி நான்கு சென்றால்
நேர்மையுள்ள வயது மீரண்டாகும்
சீரப்பா முப்பத்தி ஆறுமானால்
சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போ
தாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்
தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே ....

ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை.தனை மெய்பிக்கவே சிவனும் - சக்தியும்.உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் - பெண்ணும்சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப - துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சமபங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே , விளக்கவே அர்த்தநாரீஸ்வரர்உருவமாக சரிபாதி உடல்.