Friday, May 23, 2014

சனி நீராடு? ஏன்?, எதற்கு?

சனி நீராடு? ஏன்?, எதற்கு?
சனி நீராடு!, தலைமுறை தலைமுறையாய் நம் சமூகத்தில் தொட்டுத் தொடரும் ஒரு வாசகம். நம்மைப் போல உஷ்ணமான சீதோஷ்ன நிலை பகுதியில் வாழ்வோருக்கு தலைக்கு எண்ணை வைத்துக் குளிப்பது உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது என இன்றைக்கு அறிவியல் ஆய்வுகள் சொல்வதை, என்றைக்கோ நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றிருக்கின்றனர். இதன் பின்னால் இருக்கும் அநேக விஷயங்கள் இன்னமும் ஆய்வு செய்யப் படாமல் இருக்கிறது என்பதுதான் உண்மை. இந்த வகையில் குறிப்பாக "புதன், சனி நீராடு" என்பது பிரபலமான சொல்லாடல், ஏன் புதன் சனி நீராடு என்கிறார்கள்?
எந்த நாளில் தலை முழுகினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தேரையர் ஒரு பாடலில் விளக்குகிறார்.
"கேளு அருக்கன் பலன் தான் அழகை மாற்றும்
கெடியான திங்கள் பலன்தான் பொருளுண்டாகும்
பாலு செவ்வாய் பலன் தான் உயிரை மாய்க்கும்
பாங்கான புதன் பலன் தான் மதியுண்டாகும்
தாளு வியாழன் பலன் தான் கருத்தை போக்கும்
தப்பாது வெள்ளி பலன் கடனே செய்யும்
நாளு சனியின் பலன்தான் எண்ணெய் மூழ்க
நட பொருளும் சகதனமும் வரும் சாதிப்பாயே."
- தேரையர் -
ஞாயிற்று கிழமைகளில் தலை முழுகினால் உடல் அழகை மாற்றிவிடும், திங்கள் கிழமைகளில் தலை முழுகினால் பொருள் சேரும், செவ்வாயில் முழுகினால் உயிரை மாய்க்கும் நிலை ஏற்படலாம். புதன் கிழமைகளில் தலை முழுகினால் சிறந்த அறிவு வளர்ச்சி உண்டாகும். வியாழன் முழுகினால் அறிவு மந்தமாகும். வெள்ளிக்கிழமைகளில் தலை முழுகினால் கடன் உண்டாகும். சனிக்கிழமைகளில் தலை முழுகினால் நற் பெயரும் நல்ல நண்பர்களும் உண்டாகும் என்கிறார்.
இவற்றை அனுபவமோ அல்லது ஆராய்வோ இல்லாமல் எழுதியிருக்க முடியாது. இவற்றின் பின்னால் இருக்கும் சூட்சுமங்களும், அறிவியல் நுட்பங்கள் இன்னமும் ஆராயப் பட வேண்டியுள்ளது...

Friday, May 9, 2014

தமிழ் படிக்க தெரிஞ்சா படி

தமிழர் கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய உச்ச நீதிமன்றத்துக்கு யார் அதிகாரம் கொடுத்தது? விலங்குகள் நலவாரியம் காளைகள் துன்புறுத்தப்படுவதாக சொல்கிறதே, இந்த ஜல்லிக்கட்டை தடை செய்தால் ஜல்லிக்கட்டு காளை இனமே அழியும் என்பது அதற்கு தெரியுமா ? ஜல்லிக்கட்டு காளைகள் அதற்காகவே வளர்க்கப்படுபவை. வேறு வேலைகள் அதற்கு இல்லை. வருடத்தில் ஓறிரு முறை நடைபெறும் நிகழ்ச்சிக்காக வருடம் முழுவதும் பயிற்சி பெறுபவை. விலங்குகள் நலவாரியத்துக்கு திராணி இருந்தால் நாடு முழுவதும் மாமிசம் உண்ணபடுவதை தடை செய்யட்டும். முடியுமா அவர்களால்? ஒரு பண்டிகைக்கு ஒட்டகத்தை வெட்டி சாப்பிடுகிறார்கள், மாட்டை வெட்டி சாப்பிடுகிறார்கள். இதை தட்டி கேட்க்க திராணி இல்லை. ஏனெனில் தமிழன் ஒரு இளிச்ச வாயன். ஐயாயிரம் வருடங்களாக நிகழ்ந்து வரும் ஒரு வீர விளையாட்டை தடை செய்ய நூறு வருடங்களுக்கும் குறைவாக தோன்றிய உச்ச நீதிமன்றத்துக்கு யார் அதிகாரம் கொடுத்தது? ஏறுதழுவல் என்னும் நிகழ்ச்சி பற்றி இதற்க்கு என்ன தெரியும். நமது ஜனநாயகம் என்கிறார்கள் ஆனால் சமூகத்தின் ஒருசாரார்க்கு மட்டும் ஓர வஞ்சனை என்ன நியாயம்? ஒரு கலாச்சார அடையாளத்தை அழிக்க பார்ப்பது என்ன நியாயம்? ஏற்கனவே பலதடவை நடந்த அகழ்வு ஆராய்ச்சிகளில் தமிழர் நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பதை வெளியிட மத்திய அரசு தயங்கியே வந்துள்ளது. அதே சமயம் வட நாகரீகங்களை தொன்மையானது என பொய்யாக நிரூபிக்க முயன்று தோற்றது நாடறியும். இன்னும் கொஞ்ச நாளில் மாட்டு பொங்கலன்று மாடுகளுக்கு கொம்பு சீவுவது மற்றும் கொம்புக்கு பெயிண்ட் அடிப்பது தவறு அதனால் மாட்டு பொங்கலை தடை செய் என்பார்கள். அதற்கும் நாம் தலையாட்டுவோமா. அடையாளங்களை இழப்பது இறப்பதற்கு சமம். சிந்திக்கவேண்டுமடா தமிழா. உலகின் ஆதி நாகரீக முன்னோடிகளான தமிழர்கள் பின்னோடிகளிடம் மிதிபட்டு நசுக்கப்படுகின்றனர் என்பது உண்மை. மாடுகளின் மீது அக்கறையோடு இருப்பதாக பாசாங்கு பண்ணும் உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டில் தினம் குடித்தழியும் தமிழனை காக்க டாஸ்மாக்கை மூடட்டுமே ஏன் செய்யவில்லை? இது அக்கறை ஒன்றுமில்லை அரசியல். ஏறுதழுவல் நிகழ்ச்சிக்கு நிறைய சுற்றுலா பயணிகள் வருவது வடக்கதிகாரர்களுக்கு உறுத்தலோ இல்லை, நம் அடையாளங்களில் ஒன்றை அழித்த சந்தோசமோ தெரியவில்லை காரணம். இந்த நூதனமான அரசியலில் சிக்கி தமிழ் இனம் என்ன பாடுபடப்போகிறதோ தெரியவில்லை.

Wednesday, May 7, 2014

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு. அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க???
கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும். அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது
ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ. மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் . சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி? நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள், அதாவது தடயங்கள் இருக்குமாம். அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்.
சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ? கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம். அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம . அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.