Monday, February 10, 2014

நமது Mobileக்கு தேவையான அனைத்தையும் இலவசமாக Download செய்யும் தளங்கள்



நமது Mobileக்கு தேவையான வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள், மென்பொருட்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று அனைத்தையும் நாம் பைசா செலவில்லாமல் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள இணையஉலகில் பல தளங்கள் உள்ளன. அதிகபட்சம் நாம் சம்பந்தப்பட்ட தளங்களில் மெம்பராகி விட்டால் (அதுவும் இலவசம் தான் ) போதும். நாம் எப்போது வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கீழே மொபைலுக்கான சில இலவச தரவிறக்க தளங்களை பட்டியலிட்டுள்ளேன்,அங்கே சென்று உங்களுக்கு தேவையானதை
இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

*www.zedge.com

வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று உங்கள் போனுக்கு தேவையான எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.அதற்கு நீங்கள் இதில் மெம்பராகி நமது கைப்பேசி மாடலையும் தேர்வு செய்து விட்டு வேலையை ஆரம்பிக்கலாம்.அதிகபட்ச நிறுவனங்களின் பலதரப்பட்ட மாடல் கைப்பேசிகளுக்கு இங்கே எல்லாமும் கிடைக்கிறது.அது மட்டுமல்லாமல் நேரடியாக நமது கைப்பேசியிலேயே தரவிறக்கம் செய்து கொள்ளலாம் அதற்கு உங்கள் கைப்பேசியின் பிரவுசரில்http://m.zedge.net/ என்று டைப் செய்து இணையலாம்.

* www.mobile9.com

நமது கைப்பேசிக்கு தேவையான வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள், ரிங்டோன்கள்,தீம்ஸ்,மென்பொருட்கள் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதில் மெம்பராகவில்லை என்றால் ஒவ்வொரு தரவிறக்கத்துக்கும் குறைந்தது 10 நொடிகள் காத்திருக்க வேண்டியிருக்கும், அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.பின்பு தரவிறக்கம் செய்ய ஆரம்பியுங்கள்.
மேலும் இந்த தளத்தில் உங்களிடம் இருப்பவற்றையும் தரவேற்றம் செய்து மற்றவர்களின் பார்வைக்கு வைக்கலாம்.

* www.getjar.com

முழுக்க முழுக்க ஜாவா,மற்றும் சிம்பியன் வகையை சார்ந்த போன்களுக்கான கேம்ஸ்,மென்பொருட்கள் ஆகியவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள உதவும் தளம் இது.
பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் மென்பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. மெம்பராகாமல் நேரடியாக தரவிறக்கத்தை ஆரம்பிக்கலாம்.கைப்பேசியில் நேரடியாக தரவிறக்கம் செய்ய உங்கள் கைப்பேசியின் பிரவுசரில் http://m.getjar.net/ என்று டைப் செய்து இ ணையலாம்.

*http://www.apniapps.com/

ஐ-போன்,சிம்பியன்,ஜாவா வகையை சேர்ந்த போன்களுக்கான மென்பொருட்களை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.தரவிறக்கம் செய்து கொள்வதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மேன்போருளைப்பற்றிய சிறு குறிப்பும் உள்ளது,அதை படித்து பார்த்து உங்கள் போனுக்கு தேவையானால் மென்பொருளை தேர்ந்தேடுக்கலாம்.

* http://www.mobilemastee.com/

வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ்,மென்பொருட்கள்,ஸ்க்ரீன் சேவர்ஸ் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.மெம்பராக வேண்டும் என்ற அவசியம் இல்லை.

* http://dailymobile.se/

ஐ-போன்,சிம்பியன்,ஜாவா,ஆன்ராய்டு வகையை சேர்ந்த போன்களுக்கு வால்பேப்பர்கள்,கேம்ஸ்,தீம்ஸ்,மென்பொருட்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முக்கியமாக இதில் முதலில் மெம்பரான பிறகு தான் தரவிறக்கம் செய்ய முடியும்.அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.கூடுதலாக மொபைல் உலகில் வந்திருக்கும் புதிய சம்மாச்சரங்கள் அனைத்தையும் இந்த தளம் உடனுக்குடன் நமக்கு தருகிறது.

* http://www.ipmart-forum.com/

இந்த தளத்தில் Fun, Games and Entertaining என்ற பிரிவில் சென்று நமது எந்த வகை கைப்பேசிக்கும் தேவையான தரவிறக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும்.தரவிறக்கத்தை ஆரம்பிக்க முதலில் இதில் மெம்பராக வேண்டும்.புதிய மென்பொருட்களையும்,பழைய மென்பொருட்களின் புதிய அப்டேட் செய்யப்பட்ட மென்பொருட்களும் உடனுக்குடன் தருகிறார்கள்.

* http://www.youpark.com/

ஜாவா, சிம்பியன்,விண்டோஸ்,பாம்,பிளாக்பெர்ரி,ஆன்ராய்டு வகை போன்களுக்கு தேவையான மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.

இலவச,மற்றும் காசு கொடுத்து வாங்கக்கூடிய மென்பொருட்களை பட்டியலிட்டுள்ளார்கள். காசு கொடுத்து வாங்கினால் பத்து சதவீதம் தள்ளுபடி தருகிறார்கள்.மெம்பராக வேண்டும் என்று கட்டாயமில்லை. ஏதாவது இலவச மென்பொருளை தரவிக்கம் செய்ய நினைத்தால் உங்கள் இ-மெயில் முகவரியை கொடுத்து விட்டு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கைப்பேசி வழியாக http://wab.youpark.com/ என்ற முகவரியில் நேரடியாக இணையலாம்.

Sunday, February 9, 2014

ஊதாரி

ஊதாரித்தனமாக செலவழிக்கும் ஒரு பணக்காரியிடம் ஐந்து பசுக்கள் இருந்தன. தன் வீட்டில் கறக்கும் பாலை விற்றுக் கிடைக்கும் பணத்தை ஆடம்பரமாக செலவழித்து விடுவாள். போதாக்குறைக்கு கடனும் வாங்குவாள். அவள் எதிர்வீட்டில், ஒரே பசுவுடன் ஏழைப்பெண் இருந்தாள். அந்த பசு தரும் வருமானம் தான், அவள் குடும்ப வாழ்வை ஓட்டியது. அவள் அந்தப்பணத்திலும் சிறிது மிச்சம் பிடிப்பாள். பணக்காரி, தன் வீட்டுப்பாலை முழுமையாக விற்று விட்டு, ஏழைப் பெண்ணிடம் கடனுக்கு பால் வாங்கினாள். இப்படியே ஐம்பது செம்பு பால் வாங்கி விட்டாள். ஒருமுறை, ஏழையின் பசு இறந்து விட்டது. தன் நிலையைச் சொல்லி, பணக்காரியிடம், அம்மா! நீங்கள் என்னிடம் வாங்கிய பாலுக்குரிய பணத்தைக் கொடுங்கள், என்றாள். பணக்காரியோ, பாலே வாங்கவில்லை என மறுத்து விட்டாள். விஷயம் கோர்ட்டுக்குப் போனது.என்னிடம் ஐந்து பசுக்கள் இருக்க, இவளிடம் ஏன் பால் வாங்கப் போகிறேன்? என்று குண்டை தூக்கிப் போட்டாள் பணக்காரி. ஏழையோ, நடந்த உண்மையைச் சொன்னாள். நீதிபதி புத்திசாலி. நடந்ததைப் புரிந்து கொண்டார். ஆளுக்கு ஐந்து செம்பு தண்ணீரைக் கொடுத்து, கால் கழுவி வாருங்கள் என்றார். பணக்காரி, ஐந்து செம்பை நீரையும் காலில் மொத்தமாக கொட்டிக்கவிழ்த்து விட்டு, அழுக்கு கூட போகாமல் உள்ளே வந்தாள். ஏழையோ, ஒரே செம்பில் அழுக்கு தீர கால் கழுவி வந்து விட்டாள். நான்கு செம்பு நீரைத் தொடவே இல்லை. இதிலிருந்தே, பணக்காரியின் ஆடம்பரத்தைப் புரிந்து கொண்ட நீதிபதி, ஏழைக்கு சாதகமாக தீர்ப்பளித்தார். மனமும், குணமும் இயற்கையில் எப்படி அமைந்ததோ அப்படித்தான் கடைசி வரை இருக்கும். அதை மறைத்து நல்லவர் போல் நடிக்க முயன்றாலும் முடியாது.

Thursday, February 6, 2014

நல்ல வெப் சைட்

http://korakkar-sankar.blogspot.in/2012/06/blog-post_18.html

பிராணாயாமம் என்றால் என்ன?



பிராணாயாமம் என்றால், பிராணனை பற்றிய அறிவு மற்றும் அதை நமது வயப்படி அடக்குதல் என்று பொருள்.
பிராணாயாமம் செய்வதால் என்ன பயன்?
நாம் வாழும் இந்த மனித உலகம், மற்றும் அண்ட வெளியெங்கும், பிராணன்  எனும்  எல்லையற்ற சக்தியால் நிரம்பியுள்ளது.

அந்த பிராணன் தான், நம்மை, நமது உடம்பை, நமது உயிரை இயக்குகிறது. உயிருக்கு ஆதாரமாக இருப்பது மூச்சுதான். எனவேதான் அதை உயிர்மூச்சு என்கிறோம்.

ஆக, நாம், நமது மூச்சை (இடது நாசி, வலது நாசி) இறைவன் அருளோடு, கட்டுப்பருத்தி அடக்குவதன் மூலம், பிராணனை வசப்படுத்த முடியும்.

ஆரியன் நல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகுஅறி வார்இல்லை 
கூறிய நாதன் குருவின் அருள்பெற்றால் 
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.
(திருமந்திரம் 565 ) 

பறவையைவிட, வேகமாகச் செல்லக்கூடிய இந்த பிராணனாகிய குதிரையை நம் வசப்படுத்திக் கொண்டால், கள் உண்ணாமலேயே கள் உண்ட ஆனந்த நிலையை உணரமுடியும், சுறுசுறுப்பும், துள்ளலும் தானே ஏற்படும்.

புள் எனும் ஒரு வகை பறவை, குஞ்சுபோரித்தவுடனேயே, வேகமாக பறக்கும் தன்மையுடையது, அதுபோலதான் நமது மூச்சும்.

புள்ளிரும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்உண்ண வேண்டாம் தானே களிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடையார்க்கே.
(திருமந்திரம் 566 )


4ஆம் நாள் செய்தி


பிராணாயாமம் செய்யும் வழிமுறை என்ன?
ஆசனம்
நீண்ட நேரம் அமர்ந்து பிராணாயாமம் செய்ய சிறந்த இருக்கை முறை (ஆசனம்) மிகவும் முக்கியம். ஆசனம் மொத்தம் 126 நிலைகள் உள்ளன. அவற்றில் 8 சுகாசனம் எனப்பெயர்படும். அவை பத்மம், பத்திரம், கோமுகம், கேசரி, சௌத்திரம், வீரம், சுகாதனம், சுவத்திகம் என்பவை.
------------------------------------------------------------------------------------------------------
பங்கயம் ஆதி பரந்தபல் ஆசனம் 
அங்கு உளவாம்  இரு நாளும் அவற்றினுள் 
சொங்கு இல்லை யாகச் சுவத்திகம் எனமிகத் 
தங்க இருப்பத் தலைவரும் ஆமே.
 (திருமந்திரம் 558 )
-----------------------------------------------------------------------------------------
பிராணாயாமம் 
 16 மாத்திரைகள் அளவு இடது நாசி வழியாக மூச்சை 
உள்ளிழுத்து, 64 மாத்திரைகள் அளவு உள்ளடக்கி, 32 
மாத்திரைகள்  அளவு வலது நாசி வழியாக வெளிவிட 
வேண்டும். 
----------------------------------------------------------------------------------------------------
ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல்  கும்பகம் அறுபத்து நாலதில்
உறுத்தல் முப்பத் திறந்ததில் ரேசகம் 
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே 
(திருமந்திரம் 568 )
---------------------------------------------------------------------
ஏறுதல் பூரகம் - உள்ளிழுத்தல் - எரெட்டு = 16 மாத்திரைகள்
ஆறுதல் கும்பகம் - அடக்குதல் -64 மாத்திரைகள் 
ஊறுதல்  இரேசகம் - வெளிவிடுதல் - 32  மாத்திரைகள் 
மாறுதல் - இடது நாசி, வலது நாசி என மாறுதல்.
-------------------------------------------------------------------------------------------------

பிறகு வலது நாசி வழியாக மூச்சை 
உள்ளிழுத்து, இடது நாசி வழியாக 
வெளிவிட வேண்டும்.

ஆரம்பத்தில் இந்த 16:64:32 என்ற கணக்கில் பயிற்சி 
செய்வது இயலாத காரியமாகலாம். எனவே, 4:16:8  
என்ற கால அளவில் துவங்கி, படிப்படியாக நேரத்தை 
அதிகரிக்கலாம்.

மேல்  எனப்படும் தலை, கண், காதுகளும் கீழ் எனப்படும் 
 கால், பெருவிரல் முதலியவைகளும், நடு எனப்படும் 
 நெஞ்சகம், கொப்பூழ் முதலியவைகளும் நிறையுமாறு 
 மூச்சை உள்ளிழுத்தல் வேண்டும். அவ்வாறு உளிழுத்த 
மூச்சை  உள்ளே தங்கச் செய்து அளவோடு வெளியிட 
வேண்டும். அவ்வாறு செய்ய ஆலாலம் உண்டான் - சிவன்
அருள்பெறலாமே.
---------------------------------------------------------------------------------------------------
மேல்கேழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப் 
பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து 
மாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவே 
ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே.
(திருமந்திரம் 572 ) 
------------------------------------------------------------------------------------

5 ஆம் நாள் செய்தி

.  

பிராணாயமம் செய்ய ஏற்ற நேரம் எது?


பிராணாயாமம் மாலையில் செய்தால் உடலுக்குத் துன்பம் தரும் கபம் நீங்கும்.

மத்தியானத்தில் செய்தால் வஞ்சக வாதம் நீங்கும்.

விடியற்காலையில் செய்தால் பித்தம் நீங்கும்.
--------------------------------------------------------------------------------------------------------
அஞ்சனம் போன்று உடல்ஐ அறும் அந்தியில் 
வஞ்சக வாதம் அறும்மத்தி யானத்தில் 
செஞ்சிறு காலையில் செய்திடில் பித்தறும் 
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.
(திருமந்திரம் 727 )
------------------------------------------------------------------------------------------

6 ஆம் நாள் செய்தி


பிராணாயாமம் எவ்வளவு காலம் செய்யவேண்டும்?
பத்து ஆண்டுகள் தியான யோகத்தால் பிராணனை கீழே போக்காமல், உள்ளடக்கும் வல்லமை கைவரப் பெற்றவர்கள் திருநீலகண்டப் பெருமானுக்கு ஒப்பாவர்.

பதினோராண்டுப் பயிற்சியில் மேலேழ், கீழேழ்  உலகங்கள் சென்று அழகு பொருந்தத நிறைந்த நிற்பார்.

--------------------------------------------------------------------------------------------------------

          ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன் 
ஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்தி 
சீரொன்று மேலேழ்  கீழேழ் புவிச்சென்று 
ஏறோன்று வியாபியாய் நிற்றல்ஈ ராறே.
( திருமந்திரம் 648 )
-------------------------------------------------------------------------------------------------------

நாம் அனைவரும் இறைவன் அருளோடு, திருமூலர் அருளிய மூச்சுப்பயிற்சி செய்து, நோயின்றி நெடுநாள் வாழ்வோம்.

Tuesday, February 4, 2014

பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?



என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்..
நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.
வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.. முயற்சித்துப் பாருங்களேன்

Sunday, February 2, 2014

பீசா பர்கர்லாம் டூப்பு, இட்லி, சாம்பார்தான் டாப்பு......

இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்தது ,ஆய்வில் தகவல்!

தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்த காலை உணவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற பெரு நகரங்களில் சாப்பிடப்படும் காலை உணவுடன் ஒப்பிடுகையில் சென்னையின் இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய காலைநேர உணவு பழக்கம் குறித்து மும்பை, டில்லி, கோல்கட்டா, சென்னை ஆகிய 4 பெருநகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 8 முதல் 40 வயது வரையிலான சுமார் 3600 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அவர்களின் உடலில் நிறைந்துள்ள சத்துக்களின் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கார்போஹைட்ரோட், ஆற்றல், புரோட்டீன், கொழுப்புக்கள், கால்சியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

சமீப காலமாக இந்தியாவில் மக்களிடையே ஆரோக்கியம் குறித்த கவனம் அதிகரித்து வருகிறது; இந்த ஆய்வு மக்களின் உணவு பழக்கத்தை பிரதிபலிப்பதற்காக அல்ல; உணவில் குறிப்பாக காலை உணவில் நாம் சாப்பிடும் முறை மற்றும் வாழ்க்கைமுறையில் மாற்றம் ஏற்படுத்துவதற்கானதாகும்; உணவு தொடர்பாக நடத்தப்பட்ட ஏராளமான ஆய்வில் அதிகப்படியாக மக்கள் காலை உணவை தவிர்ப்பதும், உணவு சாப்பிட்டாலும் குறைந்த அளவு சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது; தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் கோல்கட்டாவின் பாரம்பரிய காலை உணவில் மைதா அதிக சேர்க்கப்படுகிறது; இதில் கார்போஹைட்ரேட்கள் அதிகம்; மிகக் குறைந்த அளவே புரோட்டீன் சேர்க்கப்படுகிறது; நார்சத்து கிடையாது; டில்லி உணவில் எண்ணெய் மிகவும் அதிகம்; மும்பையில் முறையற்ற உணவு சாப்பிடப்படுகிறது; இங்குள்ளவர்கள் வெறும் கார்போஹைட்ரேட்கள் நிறைந்த ரொட்டிகளை சாப்பிடுகிறார்கள். இவ்வாறு மும்பை நிர்மலா நிகேதன் அறிவியல் கல்லூரியின் ஆராய்ச்சித்துறை இயக்குனர் மாலதி சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மும்பையில் 79 சதவீதம் மக்கள் போதிய சத்துக்கள் அற்ற உணவுகளை சாப்பிடுகின்றனர். டில்லியில் 76 சதவீதம் பேரும், கோல்கட்டாவில் 75 சதவீதம் பேரும் சத்துக்கள் இல்லாத உணவை சாப்பிடுகிறார்கள். சென்னையில் 60 சதவீதம் பேர் மட்டுமே போதிய சத்துக்கள் இல்லாத உணவை சாப்பிடுகிறார்களாம். மற்றவர்களை விட தென்னிந்திய கிராமப்புறங்களில் வாசிப்பவர்களின் உணவில் சத்துக்கள் அதிகமாக உள்ளது. அவர்கள் ராகியை அதிகம் பயன்படுத்துவதால் அதில் வைட்டமின் பி, நார்சத்து, புரோட்டீன், கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் இருப்பதாக மெட்ராஸ் மருதஅதுவ கல்லூரியின் உணவு கட்டுப்பாட்டு நிபுணர் மீனாட்சி பஜாஜ் தெரிவித்துள்ளார். பிரபலமான இட்லி, சாம்பார் தான் அனைத்து சத்துக்களையும் உள்ளடக்கிய முழுமையான உணவு எனவும் மீனாட்சி தெரிவித்துள்ளார்.

இட்லியில் உள்ள அரிசி மற்றும் உளுந்தம் பருப்பு உணவில் முழுமையான சத்துக்களை அளிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்பாரில் உள்ள காய்கறிகள் மற்றும் பருப்பு சரிவிகித அளவில் சேர்க்கப்படுவதால் சத்துக்கள் அதிகம் கொண்டதாக உள்ளது. இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு மக்கள் காலை உணவை தவிர்கின்றனர். ஆனால் சென்னையில் காலை உணவை தவிர்ப்பவர்கள் மிகவும் குறைவு. சத்துக்கள் குறைவான உணவை சாப்பிடுபவர்களும் சென்னையில் குறைவு. சென்னையில் 50 சதவீதம் குடும்ப பெண்களும், 30 சதவீதம் வயதானவர்களும், 20 சதவீதம் வேலைக்கு செல்பவர்களும் காலை உணவாக ஆற்றல் தரும் பானங்களை மட்டுமே உட்கொள்கின்றனர்.

தூக்கம் மற்றும் விழித்தல் !

நீங்கள் தூங்கும் போது முதலில் தூங்குவது எந்த உறுப்பு என்று தெரியுமா...? நமது உடம்பின் அனைத்து உறுப்புகளும் ஒரே நேரத்தில் தூங்க ஆரம்பிக்காது. முதலில் கண்கள், பின்னர் வாசனையை உணரும் உறுப்புகள், பின்பு சுவை மொட்டுக்கள், காது, இறுதியாக தோல் ஆகியவை தூங்கும். ஆனால், நாம் விழிக்கும்போது இது தலைகீழாக நிகழும். முதலில் தோல் தன் வேலையை ஆரம்பிக்கும். பின்னர் கேட்கும் உறுப்புகள், சுவை உணரும் உறுப்புகள், நுகரும் உறுப்புகள், கடைசியாக கண்கள் விழிப்படைகின்றன.

முதுகுவலி வராமல் தடுக்க...!



1. எப்போதும் சுறுசுறுப்போடு இருப்பது, பொதுவான உடற்பயிற்சிகள் செய்வது. (உதாரணமாக) நடப்பது, நீச்சல் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது.

2. தாழ்ந்த நாற்காலியில் அதிக நேரம் அமர வேண்டாம்.

3. உறங்கும் போது கடினமான மெத்தையை உபயோகிக்கவும் (அல்லது) தரையில் உறங்கவும்.

4. நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது இருக்கையை உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளவும், அதிக தூரம் பயணிக்கும் போது பிரேக் மெதுவாக அடிக்கவும்.

5. கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள் தங்கள் இருக்கையை சரிசெய்து, தனது முழு முதுகும் இருக்கையில் (நிமிர்ந்தவாறு) இருக்கும்படி செய்யவும்.

6. அதிக எடையை தூக்கும் போது உங்கள் மார்போடு அணைத்தபடி தூக்கவும்.

7. அதிக நேரம் முதுகு திரும்பியவாறு வேலை செய்ய வேண்டாம்.

8. அதிக நேரம் நின்று கொண்டே பயணிக்க வேண்டாம்.

9. முதுகுவலி எடுத்தால், நீண்ட நேரம் அமருவதை தவிர்க்கவும், 30 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து நில பொதுவான பயிற்சிகள் செய்யவும்.

10. கீழ்க்கண்ட ஏதேனும் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக (பிசியோதெரபிஸ்டை) அணுகவும்.

1. தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் முதுகு வலி இருந்தால்.

2. வலி கால்களுக்கு பரவுதல், கால்களுக்கு பரவுதல், கால்களில் உணர்ச்சியின்மை (அல்லது) எரிச்சல்.

3. குனிந்தால் பளிச்சென்று வலி பரவுதல்.

4. நீண்ட நேரம் நின்றால், அமர்ந்தால் முதுகுவலி வருவது.

மிக்ஸி பயன்படுத்துவது எப்படி



இன்று மிக்ஸி இல்லாதவர்கள் வீட்டை பார்க்கமுடியாது..அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. மிக்ஸியை எவ்வாறு பராமரிக்க வேண்டும்..

மிக்ஸியை பயன்படுத்தும் போது லோ பவராக இருந்தால் மிக்ஸியை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் மிக்ஸியில் பொருத்தப்பட்டு இருக்கும் மோட்டார் பழுதடைந்துவிடும். மிக்ஸரில் பவர் ஏற்றும் போது முன்றில் இரண்டு பங்கு தான் போட வேண்டும்.

ஜாரில் போட்டு அரைத்தது முடித்ததும் உடனே அதில் தண்ணீர் ஊற்றி மிதமான வேகத்தில் வைத்து ஒரு சுற்று சுற்றி அலசி தனியாக எடுத்து வைக்க வேண்டும். பாத்திரங்களை சுத்தம் செய்யும் போது சுத்தம் செய்யலாம் எனப் பாத்திரத்தோடு சேர்த்துப் போடக் கூடாது.

மாவு கெட்டியாக வேண்டும் என்று கெட்டியாக அரைப்பதால் மிக்ஸி எளிதில் பழுதாகிவிடும்.

மிக்ஸின் பிளேடுகள் மழுங்கி விட்டால் கல் உப்பை ஒரு கை எடுத்து மிக்ஸியில் போட்டு ஒரிரு நிமிடங்கள் அரைத்தால் பிளேடுகள் கூர்மையாகிவிடும். மிக்ஸி பிளேடுகளை சாணை வைக்ககவே கூடாது. மிக்ஸி பிளேடுகள் மோட்டாரின் வேகத்தைப் பொறுத்தே நைசாக அரைக்கும்.

ஜாடுகளின் அடிப்பகுதி பழுதாகி விட்டால் அல்லது அடிப்பகுதியில் தண்ணீர் கசிவு இருந்தால் உடனே ஜாடை சரி பார்க்க வேண்டும். இல்லையென்றால் தண்ணீர் மோட்டாரில் இறங்கி மிக்ஸியில் பழுது ஏற்பட்டுவிடும்.

மிக்ஸி ஓடும் போது மூடியைக் கையினால் அழுத்திக் கொள்ள வேண்டும். மிக்ஸி ஒடும் போது திறந்து பார்க்கக் கூடாது. சூடான பொருள்களை மிக்ஸியில் அரைக்கக் கூடாது. மிக்ஸியில் அரைக்கும் போது சூடு உண்டாகிறதா என்பதைக் கவனித்து இடைவெளி விட்டு அரைக்க வேண்டும்.

அரைக்கும் போது பிளேடுகள் லூசாகி உள்ளதா என்பதைக் கவனித்து டைட்டு செய்து கொள்ள வேண்டும். மிக்ஸியில் ஜாடுகளின் அடிப்பாகத்தில் இரப்பரால் ஆன இணைக்கும் பகுதி அதற்கென்று மிக்ஸியில் அமைக்கப்பட்டுள்ள பள்ளமான பாகத்துடன் சரியாகப் பொருத்தப்பட வேண்டும் இல்லையெனில் மிக்ஸி பழுதாகிவிடும்.

அரைக்கும் பொருள்களுடன் பிளேடு சுலபமாக சுற்றக்கூடிய அளவு தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். இல்லையெனில் பிளேடு உடையவோ, மோட்டார் எரியவோ நேரலாம். இட்லிக்கு மிக்ஸியில் அரிசி அரைக்கும் போது இரவே ஊற வைத்துவிட்டால் மிக சிக்கிரமாக அரைத்து விடலாம். மிக்ஸி சூடாவதையும் தடுக்கலாம்.

ஆரோக்கியமான குழந்தை வேண்டுமா?



ஒரு பெண் முழுமை பெறுவது தாயானப் பின் தான். உங்களுக்குள் ஒரு உயிர் வாழும் போது அதில் கிடைக்கும் ஆனந்தத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் கர்ப்பக்காலம் மிகவும் சந்தோஷமாகவும் மறக்க முடியாதவையாகவும் இருக்கும்.

மேலும் பிறக்க போகும் தன் குழந்தை சிறந்த குழந்தையாக விளங்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும். ஏனெனில் சிறிய தவறு கூட, கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும். எனவே பிறக்க போகும் குழந்தை நல்ல ஆரோக்கியத்தோடு பிறக்க சில சிறந்த வழிகளைக் பார்க்கலாம்.

• குழந்தையின் சந்தோஷம், தாயின் சந்தோஷத்தோடு நேரடி தொடர்பில் உள்ளது. அதனால் எப்பொழுதும் தாயானவள் சந்தோஷமாக இருந்தால், கருவில் இருக்கும் குழந்தை வளத்தோடு இருக்கும்.

• மன அழுத்தம் குழந்தைக்கு நல்லதல்ல. தாய்க்கு மன அழுத்தம் ஏற்பட்டால், கருவில் இருக்கும் குழந்தையையும் அது பாதிக்கும். அதனால் நன்றாக ஓய்வெடுத்து மன அழுத்தம் தரும் விஷயங்களிடம் இருந்து தள்ளி இருக்கவும்.

• மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அனைத்து சத்துள்ள உணவுகளை தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அது குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

• கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புகள், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும்.

• தண்ணீர் முக்கியமான மற்றொரு ஊட்டச்சத்து. அதனுடைய முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆகவே அடிக்கடி தண்ணீர் குடித்து நீர்ச்சத்தோடு இருக்கவும்.

• கர்ப்ப காலத்தில் பல மருந்துகள் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதனால் நீங்களாகவே எந்த மருந்தையும் சாப்பிடக்கூடாது. எப்போதும் ஒரு மருந்தை உட்கொள்வதற்கு முன், மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.

• நடை போன்ற மெல்லிய உடற்பயிற்சி, குழந்தைக்கு நன்மையை விளைவிக்கும். ஆனால் உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் முன், மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இன்றைய உண்மைகள்...!!!



1. பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை. பக்கத்து கிரகத்தில் மனிதன் வாழ வாய்ப்பு இருக்கா என்ற ஆராய்ச்சி நடக்கிறது.

2. கையில் விலை உயர்ந்த பெரிய கடிகாரம். அதில் மணி பார்ப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை.

3. ஊருக்கு வெளியில் பெரிய பங்களா. வீட்டில் இருப்பது 2 பேர்.

4. மருத்துவ துறையில் மாபெரும் வளர்ச்சி. நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்.

5. பட்டப் படிப்புகள் நிறைய. பொது அறிவும் உலக அறிவும் மிகக் குறைவு.

6. கை நிறைய சம்பளம். வாய் நிறையச் சிரிப்பில்லை. மனசு நிறைய நிம்மதி இல்லை.

7. புத்திசாலித் தனமான அறிவாளித் தனமான விவாதங்கள் அதிகம். உணர்வுப் பூர்வமான உரையாடல்களும், சின்ன சின்ன பாராட்டுகளும் குறைவு.

8. சாராயம் நிறைந்து கிடக்கு. குடிதண்ணீர் குறைவாய் தான் இருக்கு.

9. முகம் தெரிந்த நண்பர்களை விட முகநூல் நண்பர்களே அதிகம்.

10. மனிதர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கின்றனர். மனிதம் ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

Saturday, February 1, 2014

பாத்திரங்கள் ஜாக்கிரதை

அன்றாடம் பயன்படுத்தும் காஸ் ஸ்டவ்வில் உள்ள “காஸ் பர்னர்’ ஹீட்டர், பல்பு, ட்யூப் லைட், அயர்ன் பாக்ஸ், ஹேர் ட்ரையர் ஆகியவற்றை பயன்படுத்தும் போது வெளிப்படும் ஒரு வித நெடியை நீங்கள் அனுபவப்பட்டிருப்பீர்கள்!

ஆனால், இந்த நெடி, ஒரு வித ரசாயன நெடி என்று மட்டும் சிலருக்கு தெரிந்திருக்கும். அந்த நெடி பெயர், பி.டி.எப்.இ., அதாவது, “பாலி டெட்ரா ப்ளோரோ எதிலின்’ என்பதன் சுருக்கம் தான் இது. இந்த புகையை தொடர்ந்து சுவாசித்தால், கூண்டில் அடைக்கப்பட்ட பறவை இறந்து விடும். அப்படியானால், இந்த நெடி எவ்வளவு விஷத்தன்மை கொண்டது என்று எண்ணிப்பாருங்கள்.

இந்த நெடி பரவும் பட்டியலில் சமீப காலமாக சேர்ந்து கொண்டிருப்பது, “நான் ஸ்டிக் குக்வேர்!’ உணவு அவசரமாக தயார் செய்ய வேண்டும், தோசை, அடை சூப்பராக வர வேண்டும் என்று அதிக சூட்டில் காயவைத்தால், இதில் இருந்து அதிக நெடி வெளிப்படும். இப்படி பல வகையிலும் நெடி கிளம்பும் வசதிகள் தான் இப்போது சமையல் அறையில் நிரம்பியுள்ளன. அதனால் தான், “எக்சாஸ்ட்’ மின்விசிறியை போட்டு சமைக்க வேண்டும் என்று சொல்கின்றனர் டாக்டர்கள். சரி, நீங்கள் எப்படி …? இப்படி இல்லாவிட்டால், இனியாவது நிதானமாக பிளான் பண்ணி சமையுங்கள். விஷ நெடி பாதிக்காமல் இருக்கும். ஒரு சுற்று போய்விட்டு, இப்போது பலரும் பானையை வைத்து தான் சமைக்கின்றனர். “மைக்ரோ அவன்’ கூட பயன்படுத்துகின்றனர். ஆனால், முடிந்தவரை ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல், காஸ்ட் அயர்ன், செராமிக், டைட்டானியம் போன்றவற்றாலான பாத்திரங்களை பயன்படுத்தலாம். மொத்தத்தில், எப்படிப்பட்ட நெடியும் உடலுக்கு கெடுதல் தான். அதனால், சமையல் அறையில் வெளிச்சம் இருக்கட்டும்; புகை போகட்டும்; “எக்சாஸ்டர்’ மின்விசிறியை பயன்படுத்துங்கள்.