Monday, December 23, 2013

வள்ளலாரும் ரசவாதமும்..!



வள்ளலார் ஸ்ரீ ராமலிங்க அடிகள் இந்த ரசவாத வித்தையில் தேர்ந்தவர். அவர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்.

வேம்பையர் என்பவர் எப்பொழுதும் வள்ளலாரின் கூடவே இருப்பார். அதனால் அவரால் வள்ளலாரின் செயல்கள் அனைத்தையும் உற்று நோக்க முடிந்தது. வள்ளலார் ‘இரும்பைப் பொன்னாக மாற்றுதல், மூலிகைகளைக் கொண்டு அரிய செயல்கள் செய்தல்’ போன்றவற்றைச் செய்யும் பொழுது உடன் இருந்து வந்ததால், இவருக்கு ரச வாதத்தின் மீது ஆசை ஏற்பட்டது. ஒரு நாள் யாருமறியாமல் வள்ளலார் செய்வதைப் போன்ற செயல்களில் இரகசியமாக இவர் ஈடுபட்டார். விளைவு. கண் பார்வை பறி போனது. இறுதியில் வள்ளலாரைச் சந்தித்து, தனது தவற்றை மன்னிக்குமாறு வேண்டினார் அண்ணலின் அருளால் பார்வை திரும்பப் பெற்றறார். அதுபோல தேவ நாயகம் பிள்ளை என்பவரும் ரச வாதத்தின் மீது பித்துக் கொண்டு அலைந்து பொருள் எல்லாம் இழந்தார். பின்னர் வள்ளலார் இவருக்கு புத்திமதி கூறி தடுத்தாட் கொண்டார்.

ஒருமுறை பக்தர் ஒருவர் வள்ளலாரிடம் “நீங்கள் இரும்பைப் பொன்னாக்கும் வித்தை அறிந்தவராமே அதை எங்களுக்குச் செய்து காட்டுங்களேன்” என்றார். உடனே அவர் கையில் இருந்த சொம்பை வாங்கி வள்ளலார், அதைச் சிறிது நேரம் தம் கையில் வைத்திருந்து பின்னர் மீண்டும் அந்த அன்பரிடம் கொடுத்தார். அப்போது அந்தச் சொம்பு தங்கமாக மாறியிருந்தது. அது கண்டு அந்த அன்பர் ஆச்சரியமுற்றபோது, அந்தச் சொம்பை வாங்கிய வள்ளலார், “இந்தக் கலை ஆசைப்படாதவர்களுக்கே, இச்சையுடையோர்களுக்கு உதவாது” என்று கூறி அருகில் உள்ள கிணற்றில் எறிந்து விட்டார்.

No comments:

Post a Comment