பிராணாயாமம் என்றால், பிராணனை பற்றிய அறிவு மற்றும் அதை நமது வயப்படி அடக்குதல் என்று பொருள்.
பிராணாயாமம் செய்வதால் என்ன பயன்?
நாம் வாழும் இந்த மனித உலகம், மற்றும் அண்ட வெளியெங்கும், பிராணன் எனும் எல்லையற்ற சக்தியால் நிரம்பியுள்ளது.
அந்த
பிராணன் தான், நம்மை, நமது உடம்பை, நமது உயிரை இயக்குகிறது. உயிருக்கு
ஆதாரமாக இருப்பது மூச்சுதான். எனவேதான் அதை உயிர்மூச்சு என்கிறோம்.
ஆக, நாம், நமது மூச்சை (இடது நாசி, வலது நாசி) இறைவன் அருளோடு, கட்டுப்பருத்தி அடக்குவதன் மூலம், பிராணனை வசப்படுத்த முடியும்.
ஆரியன் நல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகுஅறி வார்இல்லை
கூறிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.
(திருமந்திரம் 565 )
பறவையைவிட,
வேகமாகச் செல்லக்கூடிய இந்த பிராணனாகிய குதிரையை நம் வசப்படுத்திக்
கொண்டால், கள் உண்ணாமலேயே கள் உண்ட ஆனந்த நிலையை உணரமுடியும்,
சுறுசுறுப்பும், துள்ளலும் தானே ஏற்படும்.
புள் எனும் ஒரு வகை பறவை, குஞ்சுபோரித்தவுடனேயே, வேகமாக பறக்கும் தன்மையுடையது, அதுபோலதான் நமது மூச்சும்.
புள்ளிரும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்உண்ண வேண்டாம் தானே களிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடையார்க்கே.
(திருமந்திரம் 566 )
4ஆம் நாள் செய்தி
பிராணாயாமம் செய்யும் வழிமுறை என்ன?
ஆசனம்:
நீண்ட
நேரம் அமர்ந்து பிராணாயாமம் செய்ய சிறந்த இருக்கை முறை (ஆசனம்) மிகவும்
முக்கியம். ஆசனம் மொத்தம் 126 நிலைகள் உள்ளன. அவற்றில் 8 சுகாசனம்
எனப்பெயர்படும். அவை பத்மம், பத்திரம், கோமுகம், கேசரி, சௌத்திரம், வீரம்,
சுகாதனம், சுவத்திகம் என்பவை.
------------------------------------------------------------------------------------------------------
பங்கயம் ஆதி பரந்தபல் ஆசனம்
அங்கு உளவாம் இரு நாளும் அவற்றினுள்
சொங்கு இல்லை யாகச் சுவத்திகம் எனமிகத்
தங்க இருப்பத் தலைவரும் ஆமே.
(திருமந்திரம் 558 )
-----------------------------------------------------------------------------------------
பிராணாயாமம்
16 மாத்திரைகள் அளவு இடது நாசி வழியாக மூச்சை
உள்ளிழுத்து, 64 மாத்திரைகள் அளவு உள்ளடக்கி, 32
மாத்திரைகள் அளவு வலது நாசி வழியாக வெளிவிட
வேண்டும்.
----------------------------------------------------------------------------------------------------
ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பகம் அறுபத்து நாலதில்
உறுத்தல் முப்பத் திறந்ததில் ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே
(திருமந்திரம் 568 )
---------------------------------------------------------------------
ஏறுதல் பூரகம் - உள்ளிழுத்தல் - எரெட்டு = 16 மாத்திரைகள்
ஆறுதல் கும்பகம் - அடக்குதல் -64 மாத்திரைகள்
ஊறுதல் இரேசகம் - வெளிவிடுதல் - 32 மாத்திரைகள்
மாறுதல் - இடது நாசி, வலது நாசி என மாறுதல்.
-------------------------------------------------------------------------------------------------
பிறகு வலது நாசி வழியாக மூச்சை
உள்ளிழுத்து, இடது நாசி வழியாக
வெளிவிட வேண்டும்.
ஆரம்பத்தில் இந்த 16:64:32 என்ற கணக்கில் பயிற்சி
செய்வது இயலாத காரியமாகலாம். எனவே, 4:16:8
என்ற கால அளவில் துவங்கி, படிப்படியாக நேரத்தை
அதிகரிக்கலாம்.
மேல் எனப்படும் தலை, கண், காதுகளும் கீழ் எனப்படும்
கால், பெருவிரல் முதலியவைகளும், நடு எனப்படும்
நெஞ்சகம், கொப்பூழ் முதலியவைகளும் நிறையுமாறு
மூச்சை உள்ளிழுத்தல் வேண்டும். அவ்வாறு உளிழுத்த
மூச்சை உள்ளே தங்கச் செய்து அளவோடு வெளியிட
வேண்டும். அவ்வாறு செய்ய ஆலாலம் உண்டான் - சிவன்
அருள்பெறலாமே.
---------------------------------------------------------------------------------------------------
மேல்கேழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப்
பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து
மாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே.
(திருமந்திரம் 572 )
------------------------------------------------------------------------------------
5 ஆம் நாள் செய்தி
.
பிராணாயமம் செய்ய ஏற்ற நேரம் எது?
பிராணாயாமம் மாலையில் செய்தால் உடலுக்குத் துன்பம் தரும் கபம் நீங்கும்.
மத்தியானத்தில் செய்தால் வஞ்சக வாதம் நீங்கும்.
விடியற்காலையில் செய்தால் பித்தம் நீங்கும்.
--------------------------------------------------------------------------------------------------------
அஞ்சனம் போன்று உடல்ஐ அறும் அந்தியில்
வஞ்சக வாதம் அறும்மத்தி யானத்தில்
செஞ்சிறு காலையில் செய்திடில் பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.
(திருமந்திரம் 727 )
------------------------------------------------------------------------------------------
6 ஆம் நாள் செய்தி
பிராணாயாமம் எவ்வளவு காலம் செய்யவேண்டும்?
பத்து
ஆண்டுகள் தியான யோகத்தால் பிராணனை கீழே போக்காமல், உள்ளடக்கும் வல்லமை
கைவரப் பெற்றவர்கள் திருநீலகண்டப் பெருமானுக்கு ஒப்பாவர்.
பதினோராண்டுப் பயிற்சியில் மேலேழ், கீழேழ் உலகங்கள் சென்று அழகு பொருந்தத நிறைந்த நிற்பார்.
--------------------------------------------------------------------------------------------------------
ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன்
ஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்தி
சீரொன்று மேலேழ் கீழேழ் புவிச்சென்று
ஏறோன்று வியாபியாய் நிற்றல்ஈ ராறே.
( திருமந்திரம் 648 )
-------------------------------------------------------------------------------------------------------
நாம் அனைவரும் இறைவன் அருளோடு, திருமூலர் அருளிய மூச்சுப்பயிற்சி செய்து, நோயின்றி நெடுநாள் வாழ்வோம்.

No comments:
Post a Comment