ஏமாற்றாதே.... ஏமாறாதே .......
ஒருத்தர்
அவர் கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது அவருக்கு எப்பவும் சந்தேகம்
தன்னை அவர் எமாத்துவதா ஒரு ஆதங்கம் இருந்தது அரை கிலோ வெண்ணெய் என்று அவர்
தருவது அரை கிலோவே இல்லை எடை குறைவாக இருக்கின்றதுன்னு குற்றம் சாட்டி
சண்டை முற்றி ஒருநாள் நீதிபதி முன் வழக்கு வந்தது வெண்ணெய் வியாபாரி
தன்னிடம் கொடுத்த வெண்ணெய் பொட்டலத்தை நீதிபதி முன் நிருத்துக் காட்டிய
ரொட்டிக் கடைகாரர், “பாருங்கள் 450 கிராம் தான் இருக்கிறது இப்படித்தான்
என்னை பலமுறை ஏய்மாற்றி இருக்கிறார் இவரை தண்டியுங்கள்ணு கூச்சலிட்டார்
நீதிபதி வெண்ணெய் வியாபாரியை பார்த்து “என்ன சொல்கிறீர்கள் ஒவ்வொரு
முறையும் 50 கிராம் குரைவாக தந்த்து குற்றமில்லையா ? ன்னு கேட்டாரு ஆதுக்கு
வெண்ணெய் வியாபாரி ஐயா என்னிடம் எடைக்கல் கிடையாது அதனால் 500 கிராம்
எடையுள்ள பொருள் ஏதேனும் ஒன்றை எடைக்கல்லுக்கு பதிலாக பயன்படுத்துவது
வழக்கம் பெரும்பாலும் இவரது கடை ரொட்டியைத்தான் வாங்குகிறேன் அதையே அவ்வாறு
பயன்படுத்துவேன் பாக்கெட் மீது 500 கிராம் என்று எழுதப்பட்டிருப்பதை நம்பி
இவரது ரொட்டியை எடைக் கல்லுக்குப் பதுலாக தராசில் பயன்படுத்துவேன்
இப்போது பாருங்கள் என் வெண்ணெயும் அவரது ரொட்டியும் சமஎடையாக இருக்கும்
என்று தராசில் இரண்டையும் எதிர் எதிராக வைத்தார் சம்மாக இருந்தது
எல்லோரும் பிறர் தன்னை ஏமாற்றக்கூடாதுன்னு நினைக்கிறாங்களே ஒழிய தானும் பிறரை ஏமாற்றிக் கூடாதுன்னு ஏன் நினைப்பதில்லை
No comments:
Post a Comment